ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோவில்
Page 1 of 1
ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோவில்
ஸ்தல வரலாறு....
ஈரோடு மாவட்டம், ஈரோடு- சென்னிமலை சாலையில் உள்ளது மயிலாடி. இந்த ஊருக்கு அருகில் உள்ள வேலம்பாளையத்தில் கோவில்கொண்டு, அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார், ஸ்ரீகிருஷ்ண பெருமாள் ஸ்வாமி! சுமார் 500 வருடங்கள் பழைமை மிக்க திருக்கோயில் இது.
ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியதாம். அதற்குச் சின்னதாக ஒரு சந்நிதி அமைத்து, தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் வழிபடத் துவங்கினார்கள் ஊர்மக்கள்.தற்போது அர்த்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீகிருஷ்ணபெருமாள் கோயில்.
கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீகிருஷ்ணர், கொள்ளை அழகு! இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; திருமண வரம் கைகூடும். நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீகிருஷ்ணருக்கு வஸ்திரம் சார்த்தி, திருமஞ்சனம் செய்து வணங்கினால், தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஈரோடு மாவட்ட பெண்களின் நம்பிக்கை.
போக்குவரத்து வசதி...
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஆலயம். சென்னையிலிருந்து ஈரோடு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» காளமேக பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்
» வீர நாராயணப் பெருமாள் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum