தினேஷ்கார்த்திக், ரோகித் அதிரடியால் தோற்றோம்: டெல்லி கேப்டன் ஜெயவர்த்தனே
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லிடேர் டெவில்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 48 பந்தில் 86 ரன்னும் (14 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 50 பந்தில் 74 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். அம்பதிராயுடு 8 பந்தில் 24 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
210 ரன் என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 44 ரன்னில் வெற்றி பெற்றது. வார்னர் அதிக பட்சமாக 61 ரன்னும் (37 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஜூனைஜா 40 பந்தில் 49 ரன்னும் எடுத்தனர். ஜான்சன், ஒஜா, போலார்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
டெல்லி அணியின் இந்த தோல்வி குறித்து கேப்டன் ஜெயவர்த்தனே கூறியதாவது:-
210 ரன் என்பது கடினமான இலக்கே. எங்களது தொடக்கம் சிறப்பாக அமைவது அவசியம். வார்னர், மன்பிரீத் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது ஒட்டுமொத்தமாக எங்களது செயல்பாடு சரியாக இல்லை.
தினேஷ் கார்த்திக்கும், ரோகித் சர்மாவும் 7-வது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டு எங்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர். இருவரது அதிரடியான ஆட்டத்தால் தான் 200 ரன்னுக்கு மேல் சென்றது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இனி வரும் ஆட்டங்களிலாவது எங்களது முழு திறமை வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எல்லாம் சரியாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
தினேஷ் கார்த்திக்-ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர்களிடம் நான் ஏற்கனவே உங்கள் விருப்பம்போல விளையாடுங்கள் என்று கூறி இருக்கிறேன். வார்னரை அவுட் செய்தால் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்தேன். அப்படியே நடந்ததால் வெற்றியும் பெற்றோம். உன்முக்சந்த் அடித்த பந்தை நான் கேட்ச் பிடித்ததை நம்ம முடியவில்லை.
இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே சென்னை அணியை வென்று இருந்தது. பெங்களூர் அணியிடம் தோற்று இருந்தது. 4-வது ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வருகிற 13-ந்தேதி சந்திக்கிறது.
டெல்லி அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அந்த அணி 4-வது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வருகிற 12-ந்தேதி சந்திக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்
» ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்: தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா
» ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது
» சானியா மிர்ஷா வின் அதிரடியால் இந்தியா வெற்றி
» வாட்சன் அதிரடியால் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum