எந்த அணியையும் வீழ்த்த முடியும்: ராஜஸ்தான் கேப்டன் டிராவிட்
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 87 ரன்னில் ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய ராஜஸ்தான அணி 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரகானே 54 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 68 ரன்னும் யாக்னிக் 24 பந்தில் 34 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 92 ரன்னில் சுருண்டது. இதனால் ராஜஸ்தான் 87 ரன்னில் அபார வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் அதிக பட்சமாக 30 ரன் எடுத்தார். பவ்ல்னெர் 3 விக்கெட்டும், சந்திலியா, ஸ்டுவர்ட் பின்னி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். ராஜஸ்தான் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மும்பை இந்தியன்ஸ் 2-வது தோல்வியை தழுவியது.
இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ராகுல்டிராவிட் கூறியதாவது:-
மும்பைக்கு எதிராக எங்கள் அணியின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. நான் ஆட வேண்டிய இடத்தில் யாக்னிக்கு வாய்ப்பு கொடுத்தேன். அவர் சிறப்பாக விளையாடினார். ராஜஸ்தான் அணி பலம் பொருந்தியதாக இருப்பதாக நான் கருதுகிறேன். இதனால் எந்த அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பாண்டிங் கூறும்போது, நாங்கள் 3 துறைகளிலும் (பேட்டிங், பவுலிங், பீல்டிங்) தோல்வி அடைந்தோம். ராஜஸ்தான் அணி எங்களை விட அனைத்து வகையிலும் சிறப்பாக ஆடியது என்றார். ராஜஸ்தான் அணி 6-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வருகிற 20-ந்தேதி எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் 6-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வருகிற 21-ந்தேதி சந்திக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த மாதிரி ஜாதக அமைப்பு டைவர்சில் முடியும்?
» திருமணத்திற்கு பிறகும் எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியும்: ஐஸ்வர்யாராய் பேட்டி
» கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!
» கர்நாடக தேர்தலில் எடியூரப்பாவை வீழ்த்த பா.ஜ.க. திட்டம்
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum