புனேவாரியர்ஸ் அணியை அசத்தலாக வீழ்த்தியது பஞ்சாப்
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 29-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் தொடங்கியது. இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் பீல்டிங் தேர்வு செய்தார்.
உத்தப்பா- பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் புனே அணிக்கு சிறப்பாக தொடக்கம் அளித்தனர். உத்தப்பா 37, பின்ச் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த யுவராஜ் சிங் 24 பந்தில் 34 ரன் எடுத்தார். லூக் ரைட் 10 பந்தில் 34 ரன் அடிக்க புனே வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன் குவித்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. அதிரடி வீரர் கில்கிறிஸ்ட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வந்த மெகமூத் டக் அவுட்டில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த வோரா 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது பஞ்சாப் அணி 6.4 ஓவரில் 58 ரன் எடுத்திருந்தது.
4-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங்- மில்லர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் புனே அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளி ரன் குவித்தனர்.
மந்தீப் சிங் 39 பந்தில் அரைசதமும், மில்லர் 29 பந்தில் அரை சதமும் அடித்தனர். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
கடைசி இரண்டு ஓவரில் வெற்றி பெற 29 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை திண்டா வீசினார். முதல் இரண்டு பந்திலும் மில்லர் பவுண்டரி விளாசினார். 3, 4, 5 -வது பந்துகளில் ஒரு ரன்னும், 6-வது பந்தில் இரண்டு ரன்னும் எடுக்கப்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது. லூக் ரைட் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் மந்தீப் சிங் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் மில்லர் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அருமையான சிக்சர் விளாசினார்.
4-வது பந்தை ஒயிட் புல்டாசாக வீசினார். இதில் மில்லர் இரண்டு ரன் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தையும் ஒயிட் புல்டாசாக வீசினார். இதை மில்லர் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அருமையான சிக்சராக தூக்கினார். இதனால் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மில்லர் 80 ரன்னும், மந்தீப் சிங் 77 ரன்னும் எடுத்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
» பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை
» பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
» பஞ்சாப் அணியை வென்று 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை அணி தகுதிப்பெற்றது
» டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum