அரசியலுக்கு வராதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்
Page 1 of 1

இளைய தலைமுறை அவார்ட்ஸ் சார்பில் இலக்கிய விருது வழங்கும் விழா கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் 2 முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, மற்றும் கோவை ஞானி, தொ.பரமசிவன் ஆகிய மூன்று பேருக்கு இளைய தலைமுறை விருது மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இது ரசிகர்களாகிய உங்களுக்கு கிடைத்த பெருமை. இது நாம் அவர்களுக்கு கொடுக்கும் கவுரவம். இந்த கூட்டம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது. இங்கு விருது பெற்றுள்ள 3 பேரும் தமிழின் அமைதிக்கு பணியாற்றியவர்கள்.
சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுங்கள் என்று என்னை கூறியவர்கள் இவர்கள். நான் சாதாரண சினிமாக்காரன். இவர்களை நாம் பாராட்டாவிட்டால் நம் சுயமரியாதையை இழந்தவர்கள் ஆகிவிடுவோம். மக்களிடம் நிறைய விஷயங்களை எடுத்து செல்லும் இவர்களுக்காக நீங்கள் மிகப் பெரிய கரவொலி எழுப்ப வேண்டும். இவர்களுடைய எழுத்துக்களில் ஆளுமை திறமை இருக்கும். நான் உங்களை கேட்டுக் கொள்வதெல்லாம் இவர்கள் எழுதிய புத்தகத்தை படியுங்கள்.
நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று என்னை பலர் கேட்டிருக்கிறார்கள். நான் சுமாரான நடிகன் தான். அதனால் வரவில்லை என்று கூறிவிட்டேன். நீங்கள் 8-ம் வகுப்பு வரை தானே படித்திருக்கிறீர்கள். பின்னர் எப்படி நீங்கள் இவ்வளவு விஷயங்களை பேசுகிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்டனர். இதற்கு காரணம் இங்கு விருது பெற்றவர்களின் தொடர்பு இருப்பதால் தான் என்னால் இப்படி பேச முடிகிறது என்று கூறினேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியலுக்கு வராதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்
» மேக்னாவுக்கு தூக்கம் வராதது ஏன்?
» தமிழகத்திலிருந்து யாரும் வராதது ஏன் அக்கா என்று என்னிடம் தமிழர்கள் கேட்கிறார்கள் – ஆசின்
» அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டார் விக்ரம்!
» அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் கார்த்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum