தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்திலிருந்து யாரும் வராதது ஏன் அக்கா என்று என்னிடம் தமிழர்கள் கேட்கிறார்கள் – ஆசின்

Go down

தமிழகத்திலிருந்து யாரும் வராதது ஏன் அக்கா என்று என்னிடம் தமிழர்கள் கேட்கிறார்கள் – ஆசின் Empty தமிழகத்திலிருந்து யாரும் வராதது ஏன் அக்கா என்று என்னிடம் தமிழர்கள் கேட்கிறார்கள் – ஆசின்

Post  ishwarya Thu Apr 25, 2013 1:17 pm

எங்களைப் பார்க்கவோ, உதவவோ, தமிழகத்திலிருந்து யாரும் வராதது ஏன் அக்கா என்று என்னிடம் இலங்கைத் தமிழர்கள் கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.

யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று தமிழ் திரையுலகினர் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் போய் உட்கார்ந்து கொண்டு பேட்டியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஆசின்.

தனக்கு தடை விதிக்க சிலர் வேண்டுமென்றே துடிப்பதாகவும், அதைக் கண்டு தான் பயப்படவோ, கவலைப்படவோ போவதில்லை என்று அவர் கூறுகிறார். அதை விட தமிழகத்திலிருந்து யாரும் தங்களைப் பார்க்க வராதது ஏன் என்று இலங்கைத் தமிழர்கள் தன்னிடம் கேட்டதாகவும் கூறி ஒட்டுமொத்த தமிழக
மக்களையும் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு ஆசின் அளித்துள்ள பேட்டியில்,

நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை. தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.

இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், விடுதலைப்புலிகள் அதிகம் இருந்த இடமுமான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.

தமிழர்களுக்கு ஆபரேஷன் செய்ய உதவினேன்

யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண் கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன்.

இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன். ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

150 பெண்களை தத்தெடுத்துள்ளேன்

இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?

என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள், அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்? என்று கண்கலங்கி கேட்கிறார்கள்.

விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா என்று கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார் ஆசின்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள் அமிதாப்
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» மேக்னாவுக்கு தூக்கம் வராதது ஏன்?
» அரசியலுக்கு வராதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்
»  அரசியலுக்கு வராதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum