கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
Page 1 of 1

கர்நாடக முன்னாள் மந்திரி கிருஷ்ணப்பா. காங்கிரசை சேர்ந்த இவர் சட்டசபை தேர்தலில் கே.ஆர்.புரம் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து விலகி ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இணைந்தார். அக்கட்சி சார்பில் சிரியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கிருஷ்ணப்பா வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கே.ஆர். புரத்தில் உள்ள கிருஷ்ணப்பாவின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.2 1/4 கோடி பணத்தை கைப்பற்றினர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்ராவதி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சி.எம்.இப்ராகீம் போட்டியிடுகிறார். இவர் பொம்மன்கட்டே பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார வேனில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பத்ராவதி காகிதநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட வேனையும், காரையும் சோதனையிட்டனர். அப்போது பிரசார வேனில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தது தெரிந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரும், தேர்தல் பிரசார வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல பத்ராவதி ஜெய்ஸ்ரீ சதுக்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் விதியை மீறி ஆட்டோவில் பிரசாரம் செய்த மாலேன ஹள்ளியை சேர்ந்த ஜானி, அந்தரகங்கேவை சேர்ந்த மஞ்சு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்நாடகாவில் நான்தான் ஆட்சியை பிடிப்பேன்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» கமலஹாசனுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி அழைப்பு: எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்

» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum