புதுவை: ராமதாஸ் கைதை கண்டித்து முழு அடைப்பு
Page 1 of 1

தமிழக அரசு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனடியாக விடுவிக்க கோரியும் தமிழகம் மற்றும் புதுவையில் பா.ம.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுவை மாநில பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி இன்று பந்த் போராட்டம் நடந்தது. பந்த் போராட்டத்தை யொட்டி புதுவையில் நேற்று இரவு முதலே பஸ்கள் ஓடவில்லை. இன்று அதிகாலையில் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தனியார் பஸ்கள் மட்டுமல்லாது புதுவை அரசு பஸ்களும் ஓடவில்லை. மேலும், தமிழகத்தில் இருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும் ஓடவில்லை. தமிழக்தில் இருந்து புதுவைக்கு வந்த ஒரு சில அரசு பஸ்களும் புதுவை எல்லை பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட்டு திரும்பி சென்றன.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அதே போல் புதுவையில் இருந்து வெளியூர் மற்றும் கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் பஸ் நிறுத்தங்களிலும் பஸ் நிலையத்திலும் பயணிகள் தவித்தபடி இருந்தனர்.
பெரிய பணி நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை திறக்கப்படவில்லை. பெரிய மார்க்கெட் சிறிய மார்க்கெட் ஆகியவையும் திறக்கப்படவில்லை. நகரின் முக்கிய வீதியான நேரு வீதி, மறைமலை அடிகள் சாலை, காந்தி வீதி, மிஷன் வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் நகரமே வெறிச்சோடி கிடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கவில்லை. ஆனால், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.
ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. இதனால் நகர பகுதிக்குள்கூட பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் நிலை ஏற்பட்டது. வெளியூரில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே தங்கி இருந்தனர்.
ஒட்டுமொத்தத்தில் பந்த் போராட்டத்தால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்த் போராட்டத்தை யொட்டி நகரில் பிரதான சாலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» ராமதாஸ் கைதை கண்டித்து வன்முறை: 3 பஸ்கள் எரிப்பு, 100 பஸ்கள் சேதம்
» இரட்டை சேவை வரியை கண்டித்து ஓட்டல்கள் அடைப்பு
» புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum