பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
Page 1 of 1
பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் வருகிற 11-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் சட்டசபைக்கு அங்குள்ள ஜால்மாக்சி தொகுதியில் அப்துல் படெக்மாக்சி என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
அவர் நேற்று காலை சங்கன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் கார்களில் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அக்கும்பல் வேட்பாளர் அப்துல்படெக் மாக்சியையும், அவருடன் வந்த உறவினர்கள் அப்துர் ரஷித், ராபின்கான் மற்றும் ஜானிலஸ்கானி ஆகிய 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்கள் தவிர மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட வேட்பாளருடன் சென்ற 27 பேரை காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டடிருக்கலாம் என போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் மாநில கவர்னர் ஷீல்பிகர்அலி மாக்சியின் குடும்பத்தினரே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே, ஏற்கனவே மோதல் இருந்து வந்ததாகவும், இதனால்தான் இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - காங்கிரஸ் உறுதி
» மாயாவதி கட்சி முக்கிய பிரமுகர் டெல்லியில் சுட்டுக்கொலை
» கணவர் கண்முன்னால் கற்பழிக்க முயற்சி! டெல்லியில் இளம்பெண் சுட்டுக்கொலை!
» மராட்டிய மாநிலத்தில் பள்ளி முதல்வர் சுட்டுக்கொலை மகளின் காதல் விவகாரத்தால் தந்தை வெறிச்செயல்
» பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum