பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - காங்கிரஸ் உறுதி
Page 1 of 1

புதுடெல்லி, மார்ச். 26-
காங்கிரஸ் கட்சியில் வரும் 2014-ம் ஆண்டுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று அக்கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியதாவது:-
ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வருவார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், அனைத்து தொண்டர்களும் மனதார விரும்புகிறார்கள். நாங்களும் ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று முழுமையாக நம்புகிறோம்.
பிரதமருக்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது. ராகுல் காந்தி முற்போக்குடனும், சுதந்திரமாகவும் சிந்தித்து வருகிறார். எனவே ராகுல்தான் ஒரு பிரதமர் வேட்பாளராக இருப்பார். அவரே நாட்டை முன்னோக்கி எடுத்துசெல்வார்.
இவ்வாறு ரஷீத் ஆல்வி கூறினார்.
சமீபத்தில் கட்சியின் எம்.பி-க்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ராகுல் காந்தி 'நான் கட்சியை வலுப்படுத்தவே விரும்புகிறேன். என்னிடம் வந்து பிரதமர் வேட்பாளராக கேட்பது தவறானது’ என்று கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியிருப்பது, ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கும், பிரதமர் வேட்பாளராக நிற்கவேண்டும் என்பதை ஒரு போதும் ராகுல் காந்தி மறுக்கவில்லை என்று கூறியுள்ளார். எனவே ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை
» காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்: ராகுல் காந்தி
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
» ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum