சேலம் ஜெயிலில் பா.ம.க.வினர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
Page 1 of 1

பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பா.ம.கவினர் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் ஜெயிலில் சுமார் 535 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்கி உள்ளனர். டாக்டர்.ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த சிறை அதிகாரிகள் நிர்வாகிகளை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட கேட்டு கொண்டனர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணா விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் சேலம் மத்திய சிறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
இந்த நிலையில் மேச்சேரி, கெங்கவல்லி, ஜலகண்டாபுரம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தளி உள்பட பல இடங்களில் மறியல் செய்து, கைது செய்யப்பட்ட பா.ம.கவினர் சேலம் ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் ஜெயிலில் போதிய இட வசதி இல்லாததால் அவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள வெட்ட வெளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் இன்று காலை ஜெயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவர்களை கோவை மத்திய ஜெயிலுக்கு கொண்டு செல்ல முடிவு செய்து. 2 பஸ்களை வரவழைத்தனர். பின்னர் சுமார் 250-க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் சிலர் தங்களை சேலம் மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை போலீசார் சமாதானம் செய்து கோவை அழைத்து சென்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேலம் ஜெயிலில் கைதிகளுக்காக ‘நண்பன்’!
» நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
» நாளை உண்ணாவிரத போராட்டம்: நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினர்
» டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum