தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல்

Go down

டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல் Empty டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல்

Post  meenu Tue Mar 12, 2013 12:33 pm

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த கோரியும் `டெசோ' அமைப்பின் சார்பில் இன்று முழு அடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் உயர் அதிகாரிகளுடன் முதல் - அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று இரவு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், வியாபாரிகள், அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. பஸ், ரெயில், வாகன போக்குவரத்துகள் தடையில்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வணிக பகுதிகள், முக்கிய சாலைகள், அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலையில் வழக்கம் போல் பஸ்கள் ஓடியது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,365 பஸ்கள் இயக்கப்படுகிறது.

எந்த பாதிப்பும் இல்லாமல் அனைத்து பஸ்களும் இன்று இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக பஸ்களும் வழக்கம்போல் ஓடியது. ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு இல்லை. வெளியூர் ரெயில்கள் வழக்கம்போல் வந்தது. அதேபோல் காலையில் வெளிர் செல்ல வேண்டிய ரெயில்களும் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு சென்றன.

மின்சார ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு இல்லை. காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை புறப்பட்ட மின்சார ரெயிலை தி.மு.க.வினர் மறித்தனர். மறியலில் ஈடுபட்ட 100 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. சென்னையில் ஆட்டோ மற்றும் கார்களும் வழக்கம்போல் ஓடியது.

மாநகரில் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 60 ஆயிரம் ஆட்டோக்கள் இருப்பதாகவும், மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இருப்பதாகவும் அனைத்து ஆட்டோக்களும் இன்று வழக்கம்போல் ஓடுவதாக சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் மனோகரன் கூறினார். தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தது.

மற்றபடி பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது. சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டது. 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வந்தன.

முழு அடைப்பால் பாதிப்பு இல்லாவிட்டாலும் காலை 10 மணிக்கு பிறகு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னணி நிர்வாகிகள் தலைமையில் முக்கிய சாலைகளில் மறியல் செய்தனர். அவர்களை கைது செய்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலும், சைதாப்பேட்டையில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. சென்னை முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடந்தது.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட் டத்தில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடின.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல்
»  சேலம் ஜெயிலில் பா.ம.க.வினர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
»  சொகுசு பேருந்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஷூட்டிங்
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» சேலத்தில் ரயில் மறியல்: 50 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum