சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராம கோபாலன் கோரிக்கை
Page 1 of 1

சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம கோபாலன் கூறி உள்ளார். இதுகுறித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பா.ம.க. விழாவிற்கு சென்ற தொண்டர்களுக்கும், மரக்காணம் மக்களுக்கும் இடையில் நடைபெற்ற கலவரம் பெரும் கவலையளிப்பதாக இருக்கிறது. கலவரங்களை ஏற்படுத்துவதற்கென்றே ஒரு கும்பல் காத்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்துவது எளிது, அதன்பின் அது கைமீறிப்போய்விடும் என்பதை உணர வேண்டும்.
கட்சி சார்பற்ற நடுநிலையாளர்கள் கொண்ட ஒரு குழு இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தனது ஆய்வுகளை வெளியிட வேண்டும். அதுவரை அனைத்து அரசியல் கட்சிகளும், சாதிய அமைப்புகளும் அமைதி காப்பது நல்லது.
இந்த கலவரம் குறித்து தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் ஆணித்தரமாக பேசியதை பாராட்டுகிறோம். அவர் குறிப்பிட்டது போல விளம்பர வாசகங்கள் ஆத்திரத்தை தூண்டக்கூடியதாக அமைந்திருந்தது. விழாவிற்கு வந்தவர்கள் நிதானத்துடன் இருந்தார்களா? என்பதையும், சமூக விரோதிகள் எவராவது திட்டமிட்டு ஊடுருவி இருந்தார்களா? என்பதையெல்லாம் விழாக்குழு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கண்காணித்திருக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களைவிட்டு இந்த பிரச்சினையை அணுக வேண்டும்.
பூதாகரமாக்கும் சர்ச்சைகளை, விவாதங்களை தவிர்க்க வேண்டும். மக்களின் கைதட்டல்களைப் பெறுவதற்கும், சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்ப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலில் இறங்கக்கூடாது.
தமிழக முதல்வருக்கு புதிதாக எந்த பாராட்டும் தேவையில்லை. ஏற்கனவே அவருக்கு பாராட்டுகள் குவிந்துகிடக்கின்றன. தமிழக முதல்வரும், அதிகாரிகளும் சமூக பதற்றத்தை தணித்து, சமூகத்தில் பரஸ்பரம் நம்பிக்கையும், அன்பும் ஏற்பட வழிவகை காண வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இனி தமிழகத்தில் சாதிய பாகுபாட்டால் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் இதில் எடுக்கும் நடவடிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
மக்களும் வெளிசக்திகளின் சதி வலையில் வீழ்ந்தும், அரசியல் சூழ்ச்சியில் சிக்கியும் தங்களது அமைதியான, நம்பிக்கையான சமூக இணக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல் அமைதிகாக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» தமிழக, புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ?
» துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum