பெண்கள் யுத்தம்
Page 1 of 1
பெண்கள் யுத்தம்
பெண்ணென்றால் ஒரு சுமை என்று கருதுகிற மனோபாவம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் படிப்பு, வேலை வாய்ப்பிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் பொருள் ஈட்டும் நிலை ஏற்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியவற்றை - செயல்படுத்தும் பொழுதுதான் பெண்கள் என்றால் பெரும் சுமை என்ற மனப்பான்மை சமுதாயத்தைவிட்டு விலகும்.
ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இந்த நிலையில்கூட பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது என்பது விசித்திரமான நிலை அல்லவா! இது ஆண் என்றால் எஜமானன்; பெண் என்றால் அடிமை என்று நினைக்கும் இந்து மனப்பான்மை சுட்டெரிக்கப்பட வேண்டும்.
ஆண் என்றால் பலவான், பெண்ணென்றால் பலவீனமானவர் என்கிற மனப்போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆண்களின் தசை பலம் என்பது பெண்களை ஒடுக்கும் கருவி என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றால் பெண்களும் தங்கள் உடல் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
பெண்கள் பாதுகாப்பு சட்டம்
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இந்த ' பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010' அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக்குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம்.
இந்த பாதுகாப்புச் சட்டம் 'பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. "பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது.
இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum