முஷரப் மீதான நடவடிக்கையால் பாகிஸ்தான் ராணுவம் கடும் அதிருப்தி
Page 1 of 1

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 69), 4 ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு கடந்த மார்ச் மாதம் இறுதியில் தாய்நாடு திரும்பினார். வரும் 11-ந் தேதி நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் நாடு திரும்பிய அவரது கனவுகள் சிதைக்கப்பட்டு விட்டன.
அவர் தேர்தலில் போட்டியிடுவதை அந்த நாட்டின் தேர்தல் தீர்ப்பாயம் தடை செய்தது. அது மட்டுமல்ல, நெருக்கடி நிலையின்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட 60 நீதிபதிகளை பதவியை விட்டு நீக்கி, அவர்களை காவலில் வைத்த வழக்கு இப்போது தூசு தட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின்படி அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கிலும் முஷரப் கைது செய்யப்பட்டு, இரு வார கால நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியாளர் ஒருவர் இப்படி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
இதற்கிடையே முஷரப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து, பெஷாவர் ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதனால் முஷரப்பின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது.
நாடு திரும்பியது முதல் முஷரப் மீது எடுக்கப்படுகிற சட்ட நடவடிக்கைகள், பாகிஸ்தான் ராணுவத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி ஜெனரல் ஆஷ்பக் காயானி, இஸ்லாமாபாத் நகரில் நடந்த தியாகிகள் தினத்தில் பேசிய பேச்சில் வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, முன்னாள் ராணுவ தளபதியும், அதிபருமான முஷரப், பாகிஸ்தான் திரும்பிய காலம் தொட்டு, அதிகாரிகளால் நடத்தப்படுகிற விதம் ராணுவத்தில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, என்னை பொறுத்தமட்டில், இது வெறும் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமல்ல. விழிப்புணர்வும், மக்களின் பங்களிப்பும் ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே ஒளித்து வைத்துவிட்டு, தேடுகிற விளையாட்டு போல நடத்தப்படுகிற ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என எச்சரித்தார்.
இந்த பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 66 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில் பெரும்பாலான காலகட்டம், ராணுவ ஆட்சிதான் நடந்துள்ளது என்பது நினைவு கூறத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முஷரப் போட்டி
» பாகிஸ்தான் பாடகி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி: ஆஷா போன்ஸ்லேவுக்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு
» நோகடிக்கிறாங்க…..ஜெனிலியா அதிருப்தி
» சீன ராணுவம் ஊடுருவல்: மன்மோகன் சிங்குடன் ராணுவ தளபதி சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum