சீன ராணுவம் ஊடுருவல்: மன்மோகன் சிங்குடன் ராணுவ தளபதி சந்திப்பு
Page 1 of 1

காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிராந்தியம் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் 50 பேர் கொண்ட சீன படைப்பிரிவு, கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு ஊடுருவியது. இந்திய பகுதிக்குள் 19 கி.மீ. தூரத்தில் சீன படையினர் கூடாரம் அமைத்து முகாமிட்டுள்ளனர்.
அடுத்தடுத்து 5 கூடாரங்கள் எழுப்பி உள்ள சீன படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைக்கு அப்பால் இருந்து, சீன படைகளுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், லாரிகள் மூலம் கிடைத்து வருகின்றன.
அந்த பகுதிக்கு இந்திய ராணுவம், தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
சீன படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியா வற்புறுத்தியது. ஆனால் அதை ஏற்க சீனா பிடிவாதமாக மறுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் சந்தித்தார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார்.
அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி விக்ரம்சிங் கலந்து கொண்டார். சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து அவர் யோசனை தெரிவித்தார். அந்த யோசனைகளில், ராணுவத்தை பயன்படுத்தி அதிரடி தாக்குதல் நடத்துவதும் அடங்கும். சீன படைகளுக்கு பொருட்கள் வருவதை தடுப்பதும் இந்த யோசனைகளில் அடங்கும்.
மேலும், இந்திய ராணுவம் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும், எல்லை கோட்டின் மற்ற இடங்களில் இத்தகைய சம்பவம் நடக்காத வகையில், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ராணுவ தளபதி தெரிவித்தார். ராணுவ தளபதி விக்ரம்சிங், சமீபத்தில் காஷ்மீருக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்து திரும்பியது குறிப்பிடத்தக்கது.
சீன படைகளின் ஊடுருவலை தொடர்ந்து, ஏற்கனவே லடாக் எல்லைப் பகுதிக்கு கணிசமான ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் அங்கு கூடுதல் வீரர்களை அனுப்புவது பற்றி இந்திய ராணுவம் பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, சீனாவின் எல்லை மீறல் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறி உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீன ராணுவம் ஊடுருவல்: மன்மோகன் சிங்குடன் ராணுவ தளபதி சந்திப்பு
» இந்திய எல்லைக்குள் சீன ராணுவம், ஊடுருவல்! சீனப் படைகள் வாபஸ் பெறுவற்கு எந்த அறிகுறியும் இல்லையாம்!
» ‘தல-தளபதி’ சந்திப்பு!!
» ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி ராணுவ தளபதி தியாகி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு : 12 இடங்களில் ரெய்டு
» விஷாகா சிங்குடன் ஆட்டம் போட்ட சந்தானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum