தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெளியிடப்பட்ட படங்கள் உண்மையானவையா என்று அறிய விசாரணை வேண்டும் என்கின்றார் சுரேன் சுரேந்திரன்.

Go down

வெளியிடப்பட்ட படங்கள் உண்மையானவையா என்று அறிய விசாரணை வேண்டும் என்கின்றார் சுரேன் சுரேந்திரன்.  Empty வெளியிடப்பட்ட படங்கள் உண்மையானவையா என்று அறிய விசாரணை வேண்டும் என்கின்றார் சுரேன் சுரேந்திரன்.

Post  ishwarya Thu May 02, 2013 1:39 pm

போர்குற்ற ஆதாரப்படங்கள் என ஆபிக்க நாட்டு படங்கள் தொட்டு பல்வேறு படங்களை பல்வேறு ஸ்தாபனங்களும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உலகத் தமிழர் பேரவையும் தனது பங்குக்கு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் சனல் 4 தொலைக்காட்சி முன்னர் வெளியிட்ட காட்சிகளும் அடங்கியுள்ளதுடன் , படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், இந்தப் படங்கள் உண்மையானவையா அல்லது திரித்து வெளியிடப்பட்டவையா என்பதைத் தம்மால் கூறமுடியாது என்றும் அதற்கான தொழில்நுட்பம் தமது அமைப்பிடம் இல்லை என்றும் பிபிசி தமிழ் ஓசைக்கு தெரிவித்துள்ளார். இவர் தொழில் நுட்பம் இல்லை எனக்கூறுவது, இதற்கான தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பணம் வேண்டும் என மக்களிடம் உண்டியலை தூக்கிக்கொண்டு செல்வற்கு அடித்தளம் இடுகின்றார் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் இப்படங்கள் போலியானவை என பொதுவாக நிலவுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி வினவியபோது, இது போன்ற சாட்சியங்களை விசாரிக்கவே ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் படங்களை வெளியிட்டது யார் என்று கேட்கப்பட்டபோது , இதை வெளியிட்டவர்கள் இலங்கை ராணுவத்தினரே என்றும், அவர்களின் பெயரை, அவர்களது பாதுகாப்பு கருதி தாங்கள் வெளியிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவ்வாறாயின் போர்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் உலகத் தமிழர் பேரவையினருக்குமான உறவு என்ன என்ற கேள்வி இங்கு எழுகின்றது. புலிகள் ஒரு புறத்தில் யுத்தத்தை புரிந்து கொண்டு மறுபுறத்தில் தீய சக்திகளை தமிழ் மக்கள் மீது ஏவியுள்ளமை இங்கு தெளிவாகின்றது.

இந்தப் புகைப்படங்களும், வீடியோ படங்களும் தவணை முறையில் வெளியிடப்படுவதில் ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது என்று வரும் விமர்சனங்கள் குறித்து கேட்டக்கப்பட்டபோது, முதலில் அனைத்து புகைப்படங்களும் தங்களிடம் இருக்கிறது என்று கூறுவது தவறு, ஆனால் அப்படியே இருந்தாலும் தவணை முறையில் அதை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று சுரேன் சுரேந்திரன் கூறினார்.

'சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம், மனித உரிமைகள் மீறல் பிரச்சினை தொடர்பாக அழுத்தம் தர இது மாதிரி ஆதாரங்களை தவணை முறையில் வெளியிடுவதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும், இந்தப் போரின் சாட்சியாகப் போர் நடந்த பகுதியில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஒரு முறையான விசாரணை நடந்தால் போரில் என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பது குறித்து அவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்,' என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் தமது பிழைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு தற்போது எஞ்சியுள்ள ஒரே ஒரு ஆயுதம் போர்குற்றம் என்ற சொற்பதமும் அதற்கு ஆதாரம் என்ற படங்களும் என்று தெரிவித்துள்ள சுரேன் படங்களை ஒரே தடவையில் அவ்வாறான படங்களை வெளியிட்டால் வியாபாரம் முடிந்து விடும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» உடல் 'ஃபிட்னெஸ்' எப்படி உள்ளது என்று அறிய ஆவலாயிருக்கிறீர்களா?
» உடல் 'ஃபிட்னெஸ்' எப்படி உள்ளது என்று அறிய ஆவலாயிருக்கிறீர்களா?
» காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும் ஏன் என்று தெரியுமா..?!
» அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum