தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வு

Go down

பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வு Empty பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வு

Post  meenu Tue Jan 22, 2013 1:32 pm

தற்போது ஆண்களும், பெண்களும் வேலை செய்யும் இடங்களிலும், படிக்கும் இடங்களிலும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. இருவரும் பேசி பழகி நட்பாக பழகும் சூழ்நிலை உருவாகிறது. இதை ஆண்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். முதலில் ஆண்கள் பிரண்டாக பழகுவார்கள். பின்பு அவள் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, உணர்வு ரீதியாக அவளை அணுகுவார்கள்.

அவள் மீது மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டி, அவளை வசப்படுத்தி காதலிப்பார்கள். காதல் ஓ.கே. ஆனதும் சினிமா, பீச் என்று சுற்றுவார்கள். பின்பு அவளை ஆபாச படங்களை பார்க்க அழைப்பார்கள். அப்போதே பெண்கள் உஷாராகிவிடவேண்டும். அதற்கு சம்மதித்தால் அடுத்த கட்டம், உடலுறவு, பின்பு அதை படம் எடுத்தல் என்ற நிலைக்கு போய்விடும்.

படம் பிடிப்பதில் ஒரு காதலன் வெற்றி பெற்றுவிட்டால் அன்றே அவளது நிம்மதி, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகிவிடும். இதை தடுப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கியமானது. மகள்களிடம் அவர்கள் மனம் விட்டுப்பேச வேண்டும். பெற்றோர் இருவரும் தினமும் தங்களுக்கு வெளி இடங்களில் கிடைத்த அனுபவங்களை மகளிடம் சொல்லவேண்டும்.

அப்போது அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வாள். இப்படிப்பட்ட நெருக்கமான உறவை பெற்றோர் ஏற்படுத்திக் கொண்டால் மகள்கள் அடுத்தவர்களிடம் அன்பையும், நட்பையும் எதிர்பார்த்து இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்தரங்கம் படமாகும் அபாயத்தை குறைக்கலாம்..
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum