தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களே கவனமாக இருங்கள்

Go down

பெண்களே கவனமாக இருங்கள் Empty பெண்களே கவனமாக இருங்கள்

Post  meenu Tue Jan 22, 2013 1:24 pm

சகோதரிகளே! நீங்கள் எக்காரணத்தை கொண்டும் அந்நிய ஆணோடு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் அன்பு காட்டுவதை போல் நடிப்பார்கள், சிரித்து பேசுவார்கள், கண்ணே! மணியே! நீதான் என் உயிர், நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறுவார்கள், நம்பி விடாதீர்கள். ஏமாந்துவிடாதீர்கள், மோசம் போய் விடாதீர்கள்.

சகோதரிகளே,பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும்.. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

பெற்றோர்களே நம் பிள்ளை தவறு செய்யாது என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். இப்படி நினைத்து நினைத்து தான் நாம் ஏமாந்துவிட்டோம். நாம் எவ்வளவு அன்பு செலுத்தினாலும் ஒரு பக்கம் நாம் கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும்..தோழிகளே! உங்களுடைய நண்பிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது.

சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள். நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம், நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள், உங்களுடைய நட்பை பாதுகாக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அவள் செய்யும் செயலை ஆதரித்து மவுனம் காக்காதீர்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum