பெண்களே கவனமாக இருங்கள்
Page 1 of 1
பெண்களே கவனமாக இருங்கள்
குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல் உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்துதலும், தொëடர்ச்சியான உடல் வன்முறைகளாகக் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் நிலவும் நிலை....
* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றார்.
* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.
* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.
* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துக் துன்புறுத்தப்படுகின்றனர்.
* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தோறும் 1.6 பில்லியன் அமெரிக்க டெலர் செலவிடப்படுகின்றது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 வினாடிகளுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.
* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.
* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
* ஸ்பெயினின் 2000-ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செயின் பறிக்கும் திருடர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க...
» வயிறு வலியா... கவனமாக இருங்கள்..
» பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்!
» கவனமாக செய்யுங்கள்
» கவனமாக காய் நகர்த்தும் காஜல்!
» வயிறு வலியா... கவனமாக இருங்கள்..
» பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்!
» கவனமாக செய்யுங்கள்
» கவனமாக காய் நகர்த்தும் காஜல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum