யோகங்கள் தரும் யோகினி ஏகாதசி விரதம்
Page 1 of 1
யோகங்கள் தரும் யோகினி ஏகாதசி விரதம்
ஒரு வருடத்தில் வருகிற 24 ஏகாதசிகளில் ஆடி மாதம் தேய்பிறை(கிருஷ்ணபட்சம்)யில் வரும் ஏகாதசி திதிக்கு யோகினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்குப் பலவித யோகங்கள் உண்டாவதால் யோகினி ஏகாதசி ஆகியது. கிருஷ்ணபரமாத்மா தன் பகவத் கீதையில் இதைப்பற்றி விரிவாகக்கூறி உள்ளார்.
அழகாபுரி நகரத்தைச் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் தினமும் தாமரை மலர்களைக் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்து வந்தான். அழகு பொருந்திய இந்த மலர்கள் இமயத்தில் உள்ள மாலைரோவர் என்ற ஏரியில் மலர்ந்தன. ஹேமாலி என்ற குபேரனின் பணியாட்களில் ஒருவன்தான் தினமும் அந்த ஏரியில் இருந்து மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து தருவான்.
ஒருநாள் தன் மனைவி விசாலாட்சியின் அழகிலும், பாசத்திலும் மயங்கியவன் அவனிடம் கொண்ட மோகத்தால் குபேரனின் சிவ பூஜைக்காக பறித்து வந்த மலர்களை வைத்து அவனை அழகு பார்த்தாள். அன்றைய தினம் காலையிலிருந்து சிவ பூஜைக்கு மலர்கள் எடுத்து வராத ஹேமாலி மீது குபேரனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது.
பணியாட்கள் சிலரை அனுப்பி மலர்கள் வராததற்கு காரணம் என்னவென்று அறிந்து வரச்சொன்னான். பணியாளர்கள் ஹேமாலி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவன் இறைவனுக்கான மலர்களால் தன் மனைவியை அலங்கரித்து அவளுடன் சல்லாபமாக இருந்து கொண்டிருப்பதைக்கண்டு குபேரனிடம் வந்து சொன்னார்கள்.
அதிக கோபம் கொண்ட குபேரன் ஹேமாலியை அழைத்து வரச்செய்து சிவபூஜைக்காக கொண்டு வந்த மலர்களைப் பெண் ஆசை கொண்டு துர்உபயோகம் செய்ததால் தொழுநோய் கண்டு இந்த ஜென்மம் முழுவதும் அவதிப்படுவாய் என்று சாபம் கொடுத்து விட்டார்.
குபேரனது சாபம் பெற்றவன் தொழுநோய் பற்றிய நிலையில் நோயின் தாக்கம் காரணமாக அவஸ்தைப்பட்டவாறே இமயமலைச் சாரலில் வந்து வீழ்ந்தவன் இரவும் பகலும் தூக்கம் இல்லாமல் மேடு பள்ளங்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.
ஒருநாள் மார்க்கண்டேய மகரிஷி திருக்கயிலாயம் செல்ல அவ்வழியாக வந்து கொண்டிருந்த போது, அவரது காலில் விழுந்து தன் நிலையைக்கூறி தன் சாபம் நீங்கிட வழிகூறும்படி வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட மார்க்கண்டேய மகரிஷி.
ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால் சாபம் நீங்கி நலம் பெற முடியும் என்று கூறி வாழ்த்திச் சென்றார். ஹேமாலியும் தன்னுடைய உடல் ஆவி அனைத்தையும் விரதக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விரதம் முறைப்படி செய்து பெருமானை வணங்கி ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல ஒளிவீசுகிற உடலைப்பெற்று மனைவியுடன் சேர்ந்தான்.
அழகாபுதிப் பட்டணத்திற்கு வெட்க முகத்தோடு தயங்கித் தயங்கி சென்றவன் குபேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவனது அருளால் மறுபடியும் அரண்மனைப் பணியைத் தொடங்கினான். குபேரனும் மீண்டும் தாமரை மலர்களால் சிவபெருமனை வழிபடத் தொடங்கி மகிழ்ச்சி அடைந்தான்.
குபேரனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமானால் யோகங்களைப் பெற்றுத்தரும் யோகினி ஏகாதசி விரதம் இருந்து பெருமானை பூஜை செய்து ஸ்ரீமந் நாராயண இதயம் என்ற துதியை அன்றைய நாளில் ஆறு தடவைகள் படித்தல் வேண்டும்.
அதர்வண வேத வாக்கியத்தில் உள்ள உத்தரபாகப்பகுதியில் வேத வியாசர் கூறியதாக வரும் ஸ்ரீநாராயண இருதயத்தைப்படிக்க குபேரன் அருளைப் பெறலாம்.
நாராயண பரோ தேவோ தாதா நாராயணப் பர!
நாராயண பரோத் யாதா நாராயண நமேஸ் துதே!!
நாராயண பரம்தாம த்யாதா நாராயண: பர
நாராயண பரோ தர்மோ நாராயண நமோஸ் துதே!!
(நாராயண ஸ்ருதயம் 2, 3-வது பாடல்).

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யோகினி ஏகாதசி
» யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
» யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
» யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
» ஷட்திலா ஏகாதசி விரதம்
» யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
» யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
» யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
» ஷட்திலா ஏகாதசி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum