தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்

Go down

யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம் Empty யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்

Post  ishwarya Fri May 24, 2013 12:27 pm

உலகம் சிவமயமாக இருக்கிறது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவேதான், நாம் எழுதத்தொடங்கும் பொழுது, பிள்ளையார் சுழி, சிவமயம் என்று போடுவது வழக்கம். அம்பிகைக்கு உகந்த விழா நவராத்திரி விழா. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவதாகும். அணி திகழும் சிவனுக்குக் கொண்டாடும் விழா சிவ(ன்) ராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது.

மாசி மாதம் மகத்தான காரியங்கள் நடத்துவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் நம் நினைவுக்கு வரும். அது போல, இந்த சிவராத்திரி திருநாளும் நம் நினைவிற்கு வரும். மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியன்று, அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்து இருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. 'உபாயமே' நமக்கும் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்த திருநாள் 10-3-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது. அந்த புனிதமான நாளில் விரதமிருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.

முற்காலத்தில் எல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிக நேரம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தினந்தோறும் செய்து வருவார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண் தெய்வ வழிபாடாக வைத்து, முத்தாய்ப்பாக அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை 'விஜயதசமி' யாகக் கொண்டாடினர்.

ஆண்கள் பொருள் தேடும் பொருட்டு, தொழில் துறைகளில் ஈடுபடுவதால், தெய்வ வழிபாட்டிற்கு என்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும். அதையும் வருடத்தில் ஒருநாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு, சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால், ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான முழுப்பலனும் நமக்கு கிடைக்கும்.

அதனால் தான் ஆண்டுகளுக்கு சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் 12 மணிக்காலம் எனப்படும் நேரத்தில் காவல் தெய்வமாக இருந்து அருள் வழங்கும் சிவபெருமானையும், உமையவளையும் வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வரும்.

முதலில் விநாயகப் பெருமானையும், சிவன், உமையவளையும் வழிபட்டு வருவது நல்லது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி ஆகிய ஊர்களில் இது போன்ற அமைப்புள்ள தெய்வங்கள் வீற்றிருந்து அருள் வழங்குகின்றன. சிவராத்திரியன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனின் நான்கு கால பூஜைகளையும் சிறப்பாக வழிப்பட்டால் எதிர்ப்புகள் அகலும்.

இன்னல்கள் தீரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான வாழ்வு அமையும். உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய திருக்கரங்களால் மூடியதால், உலகமே இருளால் சூழப்பெற்றது. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த, தேவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்கச் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும் கருதப்படுகிறது.

எனவே, இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சிவராத்திரியன்று நள்ளிரவு 11-30 மணிமுதல் 1 மணிவரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கும் கிடைக்கும்.

வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்ச ரத்தை பல நூறுமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum