செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறியது
Page 1 of 1
செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறியது
திங்கட்கிழமை இரவில் பழ ஆகாரம் செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி எழுந்து, திருநீறு நெற்றியில் பூசி, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவை செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கணபதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாசலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையல்நாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாயசம், கொட்டை முதலியவையை, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் வைக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும்.
செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “
-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “
-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செவ்வாய்க் கிழமை விரதம்
» அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
» செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்
» கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்
» கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்
» அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
» செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்
» கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்
» கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum