தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்கழி மாத விரத பலன்கள்

Go down

 மார்கழி மாத விரத பலன்கள்  Empty மார்கழி மாத விரத பலன்கள்

Post  ishwarya Mon Apr 29, 2013 2:07 pm

சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும் உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள்.

இந்த நாளில் சில கோவில்களில் சிறப்புப் பூஜைகளைச் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் அருளினார். மகளிர் நோன்பு நோற்பதற்குத் தகுந்த மாதம் மார்கழி. பாகவத புராணத்தில், இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு.

ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை பார்வதியை வழிபட்டனர். ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர் `கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் குறிக்கோளால் ஒன்றே. வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை மாதம் என்று வழங்குகின்றன.

மார்கழியின் பனிக் குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே இது பீடை மாதம் என்று சிலர் தவறாக திரித்து கூறி விட்டனர். உண்மையில் அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி மாதம். பீடு என்றால் சிறப்பு பெருமை என்ற அர்த்தமும் உண்டு.

எனவே பீடு உடைய மாதம் மார்கழி என்றனர். அதுவே மருவி பீடை மாதம் என்றாகி விட்டது. மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது. விடியற் காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும் முற்றத்தையும் பெருக்கித் தூய்மைப்படுத்துகின்றனர்.

தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து, அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். மார்கழியில் தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்ரடிப் பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி, மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளி யெழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாராயணம் செய்கின்றனர்.

மார்கழியில் சிறப்பாகப் பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோவில்கள் சிலவற்றில் மார்கழியில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி...........

மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதமிருக்க வேண்டும். துளசி தீர்த்தம் தவிர வேறு எதையும் உண்ணவும், பருகவும் கூடாது.

இரவு முழுவதும் சோர்வில்லாமல் கண் விழித்து, பரந்தாமனைப் போற்றும் பக்திப் பாடல்களைப் பாடலாம். பரதபதம் பெறுவதற்காக பரம பதமும் ஆடலாம். மறுநாள் துவாதசி அன்று விஷ்ணுவை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

சொர்க்கவாசல்........

வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில் வைணவக் கோவில்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்பது, ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, `காயத்திரியை விடச் சிறந்த மந்திரமில்லை, தாயை விடச் சிறந்த தெய்வமில்லை, ஏகாதசியை விடச் சிறந்த விரதமில்லை' என்ற வழக்கும் ஏற்பட்டது.

ஆறு சமய வழிபாடு..........

மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்குரிய திருநாள்கள் வருகின்றன. காணாபத்யம்-கணபதி வழிபாடு-தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்திக் கணபதியை வழிபடுகின்றனர்.

சைவம்-சிவபழிபாடு- திருவாதிரை
வைணவம்- விஷ்ணு வழிபாடு - வைகுண்டு ஏகாதசி
கௌமாரம்- முருக வழிபாடு- படி உற்சவம்.
சாக்தம் - சக்திவழிபாடு- பாவை நோன்பு.
சௌரம்- சூரிய வழிபாடு- தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி மாத இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தைப் பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்.

படி உற்சவம்.........

டிசம்பர் 31-ந்தேதி நாள் மார்கழியில் பொருந்தி வருகிறது. அந்நாளில், முருகனது திருத்தணி முதலான மலைக்கோவில் திருத்தலங்கள் பலவற்றில் `படி உற்சவம்' மிக்க சிறப்புடன் நடைபெறுகின்றது. பல குழுவினர் மலைப்படிகளின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ்ப் பாடல்களை பாடுகின்றனர்.

திருவாதிரைத் திருநாள்..........

மார்கழி பவுர்ணமியுடன் திருவாதிரை நட்சத்திரம் பொருந்தும் நாளே திருவாதிரைத் திருநாள். அன்றைய நாளில் சிதம்பரம்-தில்லை நடராஜனைத் தரிசிக்கும் தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். திருவாதிரைத் திருநாளன்று இறைவனின் முன் களி நிவேதனம் செய்கின்றனர். ஏழு காய்கறிகளைக் கலந்து செய்யும் கூட்டைத் திருவாதிரைக் கூட்டு என்று அழைக்கின்றனர்.

அனுமன் ஜெயந்தி........

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர் அனுமன். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும். ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு குங்குமப் பொட்டை இட வேண்டும்.

தினமும் இவ்வாறே தொடர்ச்சியாக, இட்டுக் கொண்டு வந்தால், குங்குமப் பொட்டு வரிசை வாலின் நுனிப் பகுதியை அடைவதற்கு முன்னால், அனுமனின் பேரருளால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். அனுமனை வழிபடுகின்றவர்களுக்கு அவர் புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை ஆகியவற்றை அருளுகின்றார். இது காஞ்சி மகா பெரியவரின் அருள்வாக்கு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum