தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செவ்வாய் தோஷம் போக்கும் விரத வழிபாடுகள்..............

Go down

செவ்வாய் தோஷம் போக்கும் விரத வழிபாடுகள்.............. Empty செவ்வாய் தோஷம் போக்கும் விரத வழிபாடுகள்..............

Post  ishwarya Mon Apr 29, 2013 2:05 pm


வார நாட்களில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை மங்கள வாரம் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் 'மார்ஸ்' எனப்படும் செவ்வாயின் ஆகர்ஷண நிலை அதிகமாக இருக்கும் நாள் செவ்வாய்க்கிழமையாகும். சூரிய மண்டலக் கோள்களில் சிவந்த நிறமுடைய கோள் செவ்வாய். ஜோதிடரீதியில் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் செவ்வாய்க்கே அதிக பொறுப்பு உண்டு.

செந்நிறக்கோள் உடலின் செந்நீரான ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு காரகத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். ஜோதிட ரீதியாக ஒருவரது சகோதர, சகோதரிகளது நிலை பற்றியும், உடல் வலிமை பற்றியும், உத்தியோகம், உடலின் சூடு சம்பந்தமான பிரச்சினைகளையும் செவ்வாயின் நிலை தெளிவாகக் குறிப்பிடும்.

நவக்கிரகங்களில் கேதுவுக்குரிய வழிபாட்டு முறைகளையும், பரிகார பூஜா நியதிகளையும் செவ்வாய்க்கிழமைகளில் செய்வதே உகந்ததாகும். 'குஜ வத் கேது' என்ற ஜோதிட வழக்கு அதை உறுதி செய்யும். சிவ பெருமானது நெற்றிக் கண்களின் தீஜ்வாலைகளால் உருவான முருகப்பெருமானே செவ்வாய்க் கிரகத்தின் தேவதை ஆவார்.

சூரசம்ஹாரத்தின் பொருட்டு எழுந்தருளிய போர்க்கடவுளின் தன்மையும், சண்டைகளுக்கும், வீர தீரச் செயல்களுக்கு காரகம் பெற்ற செவ்வாய்க் கிரகத்தின் தன்மையும் ஒப்புநோக்கத் தக்கவை. ஆங்கிலத்தேதிகளான 9, 18, 27 ஆகியவற்றில் பிறந்தவர்கள், செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை, ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டவர்கள், மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்க பலன்களை நடை முறை வாழ்வில் பெறுபவர்கள் ஆவார்.

ஒருவரது கடன் பிரச்சினைகள், சகோதர சகோதரி வகை சிக்கல்கள், உத்தியோகப் பிரச்சினைகள், பலவீனமான உடல்நிலை ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை வழிபாட்டு முறைகளால் பெரும்பகுதியைச்சரி செய்யலாம். செவ்வாய் வழிபாட்டை காலை நேரத்தில் கடைபிடிப்பதேசிறந்ததாகும்.

அதாவது செவ்வாய்க்கிழமை காலையில் குளித்து முடித்து, சிவப்பு பிரதானமாக இருக்குமாறு அமைந்த ஆடையணிந்து (அல்லது சிவப்பு நிற துண்டு அல்லது வேட்டி) நெற்றியில் குங்குமம் அணிந்து ஆரம்பிக்க வேண்டும். முருகப்பெருமானது திருவுருவப்படத்திற்கு செந்நிற மலர்களால் அலங்கரித்து,தூபம், தீபம் காட்டி சிறிது பசும்பாலை நைவேத்தியம் செய்து, வணங்கி விட்டு அன்றாட அலுவல்களைத் துவங்கலாம்.

அன்று காலையில் விரதமிருந்து மதியம் தலைவாழை இலையில் சாதமும் துவரம் பருப்பும் சேர்த்து, நெய் விட்டுப் பிசைந்து முருகனை வணங்கி விட்டு உணவையே பூரணப் பிரசாத உணர்வுடன் உண்ணலாம். இவ்வாறு 21 வாரங்கள் செவ்வாய் நோன்பு அனுசரிப்பவர்கள் செவ்வாயின் தோஷப் பிடியிலிருந்து விடுபடுவார்கள்.

நவீன கால அதிவிரைவு வாழ்க்கை முறைகளுக்கு பழக்கப்பட்டவர்கள் செவ்வாய் வழிபாட்டை விஸ்தாரமாகச் செய்ய இயலாவிடினும் காலை உண்ணா நோன்பிருந்து மதியம் வாழை இலையில் துவரம் பருப்பு சேர்க்கப்பட்ட சாதத்தை பிரசாத உணர்வுடன் உண்ணலாம். ஜோதிட ரீதியாக செவ்வாய் சகோதரகாரகன் என்ற நிலைப்பாட்டை உடையது. இன்னும் பல காரண காரியத் தொடர்புகள் அதில் சம்பந்தப்படினும் பிரதானமாக சகோதர காரகத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் ஒரு நுட்பமான விஷயம் அடங்கி உள்ளது. அதாவது செவ்வாயின் நிலை ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமாயின் அவரது சகோதர சகோதரிகளிடம் ஒரு சுமூகமான உறவு நிலையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

அப்படிப்பட்ட உணர்வுரீதியான உறவுப் பரிவர்த்தனைகளால் மனதில் மென்மையான, மேன்மையான உணர்வுகள் எழுந்து, வாழ்வியலின் நிறைநிலையை நோக்கி ஒருவரை நடத்திச் செல்லும் என்பது உளவியல் சார்ந்த உண்மை ஆகும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum