தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திங்கட்கிழமை செய்ய வேண்டிய விரத வழிபாடுகள்

Go down

திங்கட்கிழமை செய்ய வேண்டிய விரத வழிபாடுகள் Empty திங்கட்கிழமை செய்ய வேண்டிய விரத வழிபாடுகள்

Post  ishwarya Mon Apr 29, 2013 2:18 pm

வார நாட்களில் இரண்டாம் நாள் சந்திரனுக்குரியதாகும். மனம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே ஜோதிடரீதியாக 'மனோகாரகன்' எனப்படும் சந்திரனை மையப்படுத்தியே குறிப்பிடப்படுகின்றன. மற்றும் ஒருவரது தாயாருடைய வாழ்வியல் நிலைப்பாடுகள் எவை என்பது பற்றியும் ஜனன கால சந்திரன் நின்ற இடமான ராசி குறிப்பிடும்.

திங்கட்கிழமை வழிபாடு சந்திரனுடைய பூரண பலனை ஒருவருக்கு நிச்சயம் தரக்கூடியது. ஒருவருடைய பிறவி இயல்பான சுபாவத்தின் வெளிப்பாடுகள் மற்றவர்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதையும், மற்றவர்களிடத்தில் அவரது அணுகுமுறைகளின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதையும் சந்திரனின் நிலை தெளிவாக உணர்த்தும்.

திங்கட்கிழமை பூஜை முறையால் தெளிந்த நீரோடை போன்ற மனஇயல்பு ஒரு வருக்கு அமையும். ஜலதோஷம், சளித்தொந்தரவுகள், நுரையீரல் தொடர்பான சிக்கல்கள், எதிர்மறை எண்ணங்கள், பிறருடன் அணுகுவதில் உண்டாகும் முரண்பாடுகள் ஆகிய பிரச்சினைகளை திங்கட்கிழமை பூஜை முறைகளால் எளிதில் தீர்த்து விடலாம்.

ஆங்கிலத் தேதியான 2, 11, 20, 29 ஆகியவற்றிலும், திங்கட்கிழமையிலும், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும், கடக ராசியிலும் பிறந்தவர்கள் சந்திரனது ஆதிக்க பலனை கூடுதலாகப் பெற்றவர்களாவர். இவர்களது சந்திர ஆதிக்க பலனால் எந்த ஒரு சிக்கலிலும் மிக எளிதில் பாதிக்கப்பட்டு விடுவார்கள்.

மனதில் சிரமங்களைப் பற்றிய தொடர் எண்ணங்களால் வருத்தப்படுவார்கள். சந்தோஷமும் அவ்வாறே இருக்கும். அதாவது சிறிய விஷயம்கூட மனதில் பெரிய சந்தோஷமாக மலரக் கூடிய தன்மை பெற்றவர்கள். சோம வார விரதம் என்று நடைமுறை அனுஷ்டானம் உண்டு. காலையில் விரதம் இருப்பதுடன், திருக்கோவில் தரிசனமும், மவுன விரதமும் கடைபிடிப்பது அவசியம்.

சந்திரன் இரவுக் கிரகமாதலால், திங்கட்கிழமை வழிபாடு சாயங்காலத்தில் துவங்குவது விசேஷம். மாலை நேரத்தில் குளித்து வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும்படியாக ஆடை அணிந்து, வடக்கு முகமாக வழிபாட்டு முறையைத் துவக்க வேண்டும். சாத்வீகமான பெண் தெய்வ படங்களைவைத்து தூப, தீப, நைவேத்தியம், ஆரத்தி என்ற முறையில் பூஜையை நடத்தி நிறைவு செய்யலாம்.

சந்திரன் பெண் தன்மையையும் குளிர்ச்சியான கிரணங்களை உடைய கிரகம் ஆதலால், சாத்வீகமான பெண் தெய்வங்களான உமாதேவியார், புவனேசுவரிதேவி, காமாட்சி, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை ஆகிய ஏதாவதொரு தெய்வ திருவுருவத்தை வழிபாட்டு முறையில் சேர்த்து கொள்வதால் ஆன்மிக ரீதியான பூரண பலன் உண்டாகும்.

அன்றிரவு உண்ணாமலிருந்து காலையில் குளித்து இறை வழிபாட்டை நிறைவு செய்தபின்பு உண்ணா நோன்பை நிறைவுசெய்யலாம். ஜோதிட ரீதியாக சந்திரன் ஒருவரது தாயாரைக் குறிப்பிட்டுக்காட்டக் கூடியதாகும். அன்னை தந்த இவ்வுடல் வடிவம் எத்தகையது என்றும் குறிப்பிட்டுக்காட்டக்கூடியது.

நம்மை ஈன்ற அன்னையின் ஆசீர்வாதம் இருந்தால் ஜாதகத்தின் சந்திர பலம் பூரணம் பெறும். நமது உலகியல் காரணகாரியங்களில் வெற்றியை பெற்றுத்தரும். சக்தி இருவகைப்படும். ஒன்று நிலைச்சக்தி, அடுத்தது இயங்கு சக்தி எனப்படும். நிலைச் சக்தி சூரியன் (சிவம்) என்றால் இயங்கு சக்தி சந்திரன் (சக்தி) எனப்படும்.

ஆக சோமவார பூஜையின் மூலம் இயக்கநிலை மனோ சக்தி நம்மில் முறைப்படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்படும் என்பது நடைமுறை உண்மையாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum