தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

Go down

ஏகாதசி விரதம் இருக்கும் முறை Empty ஏகாதசி விரதம் இருக்கும் முறை

Post  ishwarya Mon Apr 29, 2013 1:59 pm

ஏகாதசி விரதம் மிக மிக சிறப்புடையது. அதனால் எப்படிப்பட்ட பலன்களையும் பெற முடியும். இந்த ஏகாதசி விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது? அதற்குரிய முறை என்ன என்றும் பார்க்கலாம். ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒரு வேளை) பகலில் உணவருந்தலாம். அன்றிரவு உணவருந்தக்கூடாது.

மறுநாள் ஏகாதசி முழு நாளும் உணவருந்தக்கூடாது. அடுதற்கடுத்த நாள் துவாதசி. அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏகாதசியன்று உணவில்லை என்றால், சரி. டி.வி பார்த்தோ, கதை பேசியோ பொழுதை கழிப்பது என்று பொருளில்லை.

திருமாலின் அவதாரப் பெருமை சொல்லும் நூல்களைப் படிப்பது. பிரபந்தங்களைச் சொல்வது. பூஜிப்பது என்று பொழுதைச் செலவிட வேண்டும். ஏகாதசி நாளில் இரவிலும் தூங்கக்கூடாது. மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று பகலிலும் தூங்கக்கூடாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum