தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெய்வீகப் பிறவி அருளும் பங்குனி உத்திர விரதம்

Go down

தெய்வீகப் பிறவி அருளும் பங்குனி உத்திர விரதம் Empty தெய்வீகப் பிறவி அருளும் பங்குனி உத்திர விரதம்

Post  ishwarya Mon Apr 29, 2013 1:04 pm

ஹரனும் ஹரியும் இணைந்து பெற்ற ஐயப்பன் பிறந்த தினம், மதுரை மீனாட்சி அம்மன்- சோமசுந்தரப் பெருமான் திருக்கல்யாணம், ஆண்டாள்- அரங்கநாதர் திருக்கல்யாணம், ராமாயணத்தின் நாயகன் ராமன்- சீதாதேவி திருக்கல்யாணம் என பல சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற தினம் என்ற வகையில் பங்குனி உத்திரம் எவ்வளவு புண்ணியம் வாய்ந்த தினம் என்பது விளங்கும்.

திருமண விரதம்......... இன்றைய தினத்தில் சிவபெருமானை, கல்யாண சுந்தரமூர்த்தியாக நினைத்து விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். ஈசனை திருமணக்கோலத்தில் நினைத்து விரதம் அனுஷ்டிப்பதால், இது திருமண விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதால் பங்குனி உத்திரம் என்று பெயர் பெற்றது.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் வருகிறது. பங்குனி மாதத்தில் பூமி (செவ்வாய்)யானது மீன ராசியில் இருக்கும். அப்போது சந்திரன், உத்திர நட்சத்திரத்தோடு கன்னி ராசியில் இருந்து பரிபூரண ஒளிபெற்று, பூமிக்கு தனது ஒளியை கொடுப்பதாலும் பங்குனி உத்திர தினம் விசேஷத்திற்கு உரியதாகிறது.

தெய்வீகப் பிறவி தரும்......... அம்மையப்பன் என்று அழைக்கப்படும் சிவன்- பார்வதியின் வடிவங்களை பொன்னால் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும். பின்னர் வேதம் ஓதும் ஒரு அந் தணரை அவரது மனைவியுடன் அழைத்து வேண்டியதை கொடுத்து உணவிடுதல் வேண்டும்.

பார்வதி தேவியை, சிவபெருமான் திருமணம் செய்யும் தன்மையை தனது மனதில் நினைத்தபடி தியானம் செய்ய வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு, நள்ளிரவுக்கு மேல் உணவு உண்டு, தரையில் படுத்து உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் சிவபெருமானை தேவியோடு ஸ்தாபித்திருந்த பொற்கலசத்துடன் பிற பொருட்களையும் தானமாக அந்தணருக்கு கொடுத்து அவரை வணங்கி, சிவனடியாருடன் பாராயணம் செய்தால் எண்ணியவை அனைத்தும் ஈடேறும். இந்த விரதத்தை 48 வருடங்களுக்கு ஒருவர் அனுஷ்டித்து வருவாரானால், அவர் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை எய்துவார்.

பங்குனி உத்திர மகத்துவம்............... இந்த பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டித்ததன் காரணமாக, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேற்றைப் பெற்றாள் திருமகள். மேலும் இந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இந்திராணியை அடைந்தான். பிரம்ம தேவர், சரஸ்வதிதேவியை தனது நாவினிலேயே வைத்திருக்கும் தவப்பயனை பெற்றார்.

சந்திரன் அழகு வாய்ந்த 27 கன்னியர்களை மனைவியர்களாக அடைந்து மகிழ்ந்தான் என்பது போன்றவை பங்குனி உத்திர விரதத்தின் சிறப்பை பறைசாற்றும்படியாக அமைந்தவை. திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த விரதம் இனி மையான விரதமாக இருக்கும். இந்த தினத்திற்கு மற்றொரு சிறப்பாக சிறு கதை ஒன்று உள்ளது.

அது யாதெனில்... மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரமான சிவ பக்தர். அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். ஞானசம்பந்தர் சுவாமிகளின் மகிமையை அறிந்து அவருக்கு தனது மகளை மணம் முடித்து கொடுக்க வேண்டும் என்பது சிவநேசரின் எண்ணமாக இருந்தது. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது.

உயிர்ப்பெறச் செய்தார்........... ஒருநாள் பூப்பறிப்பதற்காக பூந் தோட்டத்திற்கு சென்றாள் பூம்பாவை. அப்போது பாம்பு தீண்டிய தில் அவள் இறந்து விட்டாள். மிகவும் வருத்தமுற்ற சிவநேசர், மகளின் உடலை தகனம் செய்து எலும்பையும், சாம்பலையும் சேமித்து வைத்தார். ஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்திருந்த வேளையில் இதுபற்றி அறிந்தார்.

அவர் உடனடியாக, எலும்பு, சாம்பல் அடங்கிய குடத்தை மயி லாப்பூர் கபாலீஸ்வரர் தலத்திற்கு கொண்டு வரும்படி சிவநேசரை கேட்டுக்கொண்டார். அன்றையதினம் கபாலீஸ்வரர் உற்சவ தினத்தின் 9-ம் நாள் ஆகும். கபாலீஸ்வரருக்கு திருமண மகோற்சவ தினம்.

அன்றைய தினம் இறைவனிடம் பூம்பாவைக்காக பதிகம் பாடி, அவரை உயிர்ப்பெறச் செய்தார். அவர் பதிகம் பாடிய தினம் பங்குனி உத்திரம் என்ற சிறப்புமிக்க தினமாகும். பங்குனி உத்திர திருநாளில் சிவபெருமானை மட்டுமின்றி, முருகப்பெருமானை வேண்டியும் விரதம் இருக்கலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum