தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி உத்திர விரதம்

Go down

பங்குனி உத்திர விரதம் Empty பங்குனி உத்திர விரதம்

Post  ishwarya Mon Apr 29, 2013 1:14 pm

மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது. பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது.

கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும் வழிகாட்டும் நாள் தான் பங்குனி உத்திர திருநாள்.

அந்த திருநாள் 26.3.2013 பங்குனி 13-ம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 10.32-க்கு மேல் வருகிறது. அன்று தினம் கந்தப் பெருமானை, கவலை தீர்க்கும் முருகனை, கடம்பனை, கார்த்திகேயனை, குகனை, குறிஞ்சி மலரை மணந்த வள்ளலை, வள்ளி மணாளனை, தேவசேனா துணைவனை, ஞானப்பழம் கேட்டு மயில் ஏறி உலகை வலம் வந்தவனை, மால்மருகனை, சிந்தையில் நிறுத்தி, சிவாலயம் சென்று வழிபட்டால், வந்த துயரங்கள் விலகியோடும்.

வாழ்க்கைத்துணையும் சிறப்பாக வந்து சேரும். ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட் சியம்மன் சொக்கநாதரை மணந்து கொண்டதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பி தந்ததும் இந்த நாளில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்நாளில் மனிதர்கள் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால், மணமாலை சூடுகிற வாய்ப்பு கைகூடி வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் சிலருக்கு இருக்கலாம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆணாக இருந்தால் பெண் கிடைப்பது அரிது. பெண்ணாக இருந்தால் மாப்பிள்ளை கிடைப்பது அரிது.

செவ்வாய்க்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, அதன் பாதசார அடிப்படையில் தேர்ந்தெடுத்த தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு, முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமை தோறும் முறையாக வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். செவ்வாய் தோஷத்தைக் கூட சந்தோஷமாக மாற்றுகிற ஆற்றல் பங்குனி உத்திர விரதத்திற்கு உண்டு.

வாழ்க்கை வளமாக எதையேனும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை சிவன் மீது வைத்து, மாசி மாதம் சிவராத்திரி கொண்டாடுகின்றோம். தந்தை மீது மாசி மாதத்தில் நாம் வைத்த நம்பிக்கையை தனயன் மீது பங்குனி மாதத்தில் நாம் வைக்க வேண்டும். எனவே, பங்குனி உத்திரத்தன்று 'வேலை வணங்குவதே வேலை' எனக் கொள்வது நல்லது.

முழு நாளும் விரதமிருந்து, மாங்கனியை நைவேத்தியமாக வைத்து மால்மருகனை வழிபட வேண்டும். இல்லத்து பூஜை அறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் செய்து வைத்து, கவச பாராய ணங்களைப் படிப்பது நல்லது.

குத்து விளக்கின் கீழ் இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், 'நடுவீட்டுக் கோலம்' என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்கள் இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் 'வாரிசு' பெருகும் என்பார்கள். நைவேத்தியமாக வைத்த மாங்கனியையோ, தேன் கதலி வாழைப்பழத்தையோ நாம் சாப்பிட வேண்டும்.

தள்ளாத கிழவனாய், குறவள்ளி கரம் பற்றத் தனியாக வந்த பெருமான், தனதனெனும் சந்தத்தை அருணகிரி நாதருக்கு தயங்காமல் கொடுத்த பெருமான், உங்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து சுகங்களையும், நலங்களையும் வாரி வழங்குவார்! உத்திரத்தைக் கொண்டாடினால் உன்னத வாழ்வமையும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum