தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி உத்திர பவுர்ணமி விரதம்

Go down

பங்குனி உத்திர பவுர்ணமி விரதம் Empty பங்குனி உத்திர பவுர்ணமி விரதம்

Post  ishwarya Mon Apr 29, 2013 1:12 pm

ஒரு சமயம் பார்வதிதேவி சிவபெருமாளின் கண்களை விளையாட்டாகத் தன் கைகளால் பொத்தினாள். அப்போது இறைவனின் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதைத் தவிர்க்க தனது நெற்றிக் கண்ணைத் தோற்றுவித்து, சூரியன் உள்ளிட்ட அனைத்து உலகிற்கும் ஒளியை வழங்கினார்.

பார்வதியின் விளையாட்டால் ஒரு கணம் உலகத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டதால் சினம் கொண்ட ஈசன் தனது மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து பார்வதி தேவியை விலக்கி வைத்தார். இதனால் அன்னை வேதனையோடு காஞ்சீபுரத்தை அடைந்து அங்குள்ள ஒரு மாமரத்தின் அடியில் கடும் தவமிருந்தாள்.

அவள் தவத்தில் மகிழ்ந்த இறைவன் பங்குனி உத்திர பவுர்ணமி அன்று பார்வதி தேவியின் முன் தோன்றி மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்நாளில் பெண்கள் குறிப்பாக கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள் பங்குனி மாதப் பவுர்ணமி உத்திரத்தில் கடும் விரதம் இருந்து சிவ நாமத்தை ஜெபித்து மாலையில் பவுர்ணமி நிலவையும் வணங்கினால் பிரிந்தவர்கள் ஒன்று கூடி இனிய வாழ்வு மலரும்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள வில்லுடையான்பட்டு முருகன் கோவில் உள்ளது. இது ஒரு புராதன கோவில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாட்கள் உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் 9-வது நாள் இரவு 10 மணியளவில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. மறுநாள் உத்திரத்தன்று நெய்வேலி டவுன்ஷிப்பின் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கோவில்களில் இருந்தும், சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடமும், காவடிகளையும் பக்தி பரவசத்தோடு எடுத்துக் கொண்டு வில்லுடையான் பட்டு முருகனுக்கு அரோகரா என்று சொல்லிக் கெண்டு வருவார்கள்.

இது காண கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக ஏராளமான இடங்களில் அன்னதானம் நடைபெறும். இங்குள்ள முருகனை தரிசனம் செய்தால் வேண்டியதை வேண்டியபடி கொடுப்பான் வில்லுடையான்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum