எளிய விரத குபேர யந்திர பூஜை
Page 1 of 1
எளிய விரத குபேர யந்திர பூஜை
குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் அனைத்தையும் இழந்து நின்ற போது லட்சுமி தேவியை வணங்கி மேலே காணப்படும் யந்திரத்தை பெற்றான். ஆகவே நாமும் அந்த எளிய குபேர பூஜையை செய்ய நமக்கு நல்லது கிட்டும். அந்த பூஜையை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் தீரவும், செல்வம் பெருகவும் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல.
வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அதை செய்ய வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்காது. இந்த பூஜையை துவக்கும் முன் நமக்குத் தேவை ஒரு ஒரே மாதிரியான நாணயங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
நாம் பூஜையை துவக்கும் முன் கீழே உள்ளபடி கோலத்தை பூஜை அறையில் கடவுளுக்கு முன்னால் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை நல்ல சிவப்பு குங்குமத்தினாலும், வார்த்தைகளை (ஸ்ரீ) மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும்.
பூஜை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவருடைய வீட்டில் உள்ள வாரிசுகள் அல்லது கணவர் அதை தொடர்ந்து செய்யலாம். ஒவ்வொரு கட்டத்திலும்தாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து ஒன்பது தினங்கள் அதாவது வெள்ளிக் கிழமை என்றால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமை என பூஜிக்க வேண்டும்.
ஒன்பது வெள்ளிக் கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமி என ஏதாவது குறிப்பிட்ட நாளில் துவக்கி, அதே தினங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில், எழுத்துக்கள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டு அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.
குபேர யந்திரக் கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும் யந்திரத்தின் முன் ஒரு சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை துவக்க வேண்டும். ` தாயே, மகாலட்சுமி, என்னுடைய கடன்கள் விரைவில் தீர வேண்டும், தாயே மகாலட்சுமி எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும், தாயே மகாலட்சுமி எனக்கு நிறைய லாபம் வர வேண்டும், என்று கூறி விட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும் பூக்களை போட வேண்டும்.
அப்படி பூக்களைப் போடும்போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயத்தின் மீதே பூக்களை போட வேண்டும். அப்படி ஒன்பது முறை வேண்டிக்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்தப் பின் யந்திரத்துக்கு கற்பூரம் காட்டியப் பின் அந்த கோலத்தை வணங்கிவிட்டு பூஜையை முடித்து விடலாம்.
ஆக பூஜையில் நாம் கூற வேண்டியது மந்திரம் அல்ல, அது நம்முடைய பக்திபூர்வமான கோரிக்கைதான். ஆனால் பூஜைக்கு தேவை நம்பிக்கையும் தியான மந்திரமும் மட்டுமே. பூஜை முடிந்தப் பின் கோலத்தை உடனே அழித்து விடக்கூடாது. மறுநாள்தான் அதை ஒரு துணியினால் துடைத்து எடுக்க வேண்டும்.
மறுநாள்வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். யந்திரத்தின் மீது நேரடியாக விளக்குமாற்றால் பெருக்கக் கூடாது. துணியினால் அதை அழித்தப் பின்னரே பெருக்கவும். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.
ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் எண்பத்தி ஒரு நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை எந்த காரணத்தைக் கொண்டும் வேறு வகைக்கு செலவு செய்யக் கூடாது. சில்லறை வேண்டும் என்பதற்காக அதை மாற்றி வைத்துக் கொள்ளக் கூடாது. அது லட்சுமி தேவிக்கு தரப்படும் பூஜிக்கப்பட்ட காணிக்கை பணம் ஆகும்.
அதன் பின் அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு,பழம் தர வேண்டும். வீட்டிற்கு வரும்வகையில் சுமங்கலிகள் கிடைக்கவில்லை எனில் ஆலயத்தில் சென்று அங்குள்ள ஏதாவது ஒன்பது சுமங்கலிப் பெண்மணிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணுக்கும் கூட வெற்றிலைப் பாக்கு, பழம் தரலாம். பின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து வைத்த எண்பத்தி ஒரு நாணயங்களையும் லஷ்மி தேவியின் உண்டியலில் போட வேண்டும்.
அதைப் போடும் முன்னால் தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கையைப் போல தனக்கும் பல மடங்கு செல்வம் தர வேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூஜை முடிந்தது.
இந்த பூஜையை குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வசதி உள்ளவர்கள் எந்த பிரச்சனைக்கும் அல்லாமல் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் பக்தியுடன் செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும். பணப் பிரச்சனை இருக்காது. செல்வம் நிலைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எளிய விரத குபேர யந்திர பூஜை
» லஷ்மி குபேர பூஜை
» லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
» லஷ்மி குபேர பூஜை
» ஸ்ரீ குபேர லட்சுமி பூஜை
» லஷ்மி குபேர பூஜை
» லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
» லஷ்மி குபேர பூஜை
» ஸ்ரீ குபேர லட்சுமி பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum