விஜய்-அஜீத் “திடீர்” சந்திப்பு
Page 1 of 1
விஜய்-அஜீத் “திடீர்” சந்திப்பு
அஜீத் அசல் படத்திலும், விஜய் சுறா படத்திலும் பிசியாக நடிக்கிறார்கள். “அசல்” படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிநாடுகளில் நடந்தது. அஜீத் அதில் பங்கேற்று நடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். விஜய் “சுறா” படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்டு இருந்தார். அங்கு பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.
தற்போது இருவரது படங்களின் படப்பிடிப்பும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அருகருகே நடந்து வருகிறது. துணை நடிகர்- நடிகைகள், டெக்னீஷியன்கள் கூட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. விஜய் படப்பிடிப்பு பக்கத்து அரங்கில் நடக்கும் தகவல் அஜீத்துக்கு தெரிய உடனடியாக அங்கு சென்றார். அஜித்தை பார்த்ததும் “சுறா” படக்குழுவினர் வியப்பானார்கள்.
விஜய் மகிழ்ச்சியோடு அஜித் கையைப் பற்றி வரவேற்றார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் தனியாக உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவரவர் நடிக்கும் கதை, படப்பிடிப்பு போன்றவை பற்றியும் பேசி தெரிந்து கொண்டனர்.குறுகுறுவென்று அஜீத்தையே பார்த்துக் கொண்டிருந்த விஜய்யின் மேக்கப், மற்றும் காஸ்ட்யூமர்களும் அவர்களது அசிஸ்டெண்ட்டுகளும் தயங்கி தயங்கி “ஒரு போட்டோ எடுத்துக்கணும்” என்று கேட்க, ஆதரவோடு தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்தார் தல. தனது ஊழியர்களின் அஜீத் பற்று பற்றி கொஞ்சமும் முகம் சுளிக்காமல் ரசித்துக் கொண்டிருந்தார் தளபதி! அதன் பிறகு அஜீத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
விஜய்யின் வேட்டைக்காரன் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. அப்படம் அடுத்த மாதம் 18-ந் தேதி வெளியாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெ.வுடன் விஜய், அஜீத் சந்திப்பு!
» நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு
» திடீர் சந்திப்பு… நயன்தாராவுக்கு ரஜினி அட்வைஸ்?
» 21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா மணிரத்னம் திடீர் சந்திப்பு
» சீமான் – விஜய் சந்திப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum