விவெல் சின்னத்திரை விருது 2008- சிறந்த நடிகை ராதிகா
Page 1 of 1

அரசி தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார் நடிகை ராதிகா.
தமிழ்நாடு சின்னத் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு, விஷன் பிரோ ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் காஸ்மிக் டவுன் இணைந்து 2008-ம் ஆண்டு சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கான விவெல் சின்னத் திரை விருது வழங்கும் விழாவை சென்னை காமராஜர் அரங்கத்தில் சனிக்கிழமை மாலை பிரமாண்டமாக நடத்தின.
சிறந்த சின்னத் திரை நடிகை விருதுக்கு தேவயானி, ராதிகா மற்றும் அபிதா போட்டியிட்டனர். இவர்களில் அரசி தொடருக்காக ராதிகாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குஷ்பு வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருதுக்கு வேணு அர்விந்த், சஞ்சய் மற்றும் ரிஷி போட்டியிட்டனர். இவர்களில் திருமதி செல்வம் தொடருக்காக சஞ்சய்க்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. நடிகர் ஜீவா மற்றும் சங்கீதா இருவரும் இணைந்து இந்த விருதினை வழங்கினார்.
சிறந்த இயக்குநர் மற்றும் கதாசிரியருக்கான விருதை திருமதி செல்வம் தொடருக்காக குமரன் பெற்றார். இயக்குநர் பேரரசு மற்றும் மிஷ்கின் ஆகியோர் இந்த விருதினா வழங்கினார்கள்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை கோலங்கள் தொடருக்காக திருச்செல்வத்துக்கு கே பாக்யராஜ் வழங்கினார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை டி இமானுக்காக டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் பாடலாசிரியர் விருதை யுகபாரதிக்கு முத்துலிங்கமும், நடனத்துக்கான விருதை கலாவுக்கு சுந்தரமும் வழங்கினார்கள்.
வசனத்துக்கான விருதை பாஸ்கர் சக்திக்கு ஆரூர்தாஸ் வழங்கினார். சிறந்த புதுமுகத்துக்கான விருதை லியாகத் அலிகானுக்கு நடிகை சக்தி வழங்கினார்.
சிறந்த காமெடி நடிகருக்கான விருது விசி ஜெயமணிக்கு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளருக்கான விருதை வசீகரனுக்கு எஸ் சரவணன் வழங்க, வில்லனுக்கான விருதை அஜய்க்கு அலெக்ஸ் கொடுத்தார்.
சிறந்த வில்லிக்கான விருதை வடிவுக்கரசிக்கு மும்தாஜ் வழங்க, விகடன் ஒளித்திரை பி சீனிவாசனுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை (கோலங்கள்) ஆர்பி சவுத்ரி கொடுத்தார். சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை டெல்லி கணேஷூக்கு இளவரசு வழங்கினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை எஸ் என் லட்சுமிக்கு அனைத்துக் கலைஞர்களும் இணைந்து வழங்கினார்கள்.
இயக்குநர் எழில், வசனகர்த்தா ஈ ராமராஸ், இசையமைப்பாளர் சிற்பி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர், பாடலாசிரியர் காமகோடியன், டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தனர்.
விழாவில் பாடல் நடனம் என கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் தேவயானி, அபிதா, வேணு அர்விந்த், ஏராளமான சின்னத் திரை – பெரிய திரைக்கலைஞர்கள் ஒரு சேர கலந்து கொண்டு, புதுமையான கலைவிழாவாக நடத்தினர்.
விஜய் ஆதிராஜ் – திவ்யா சிங்காரவேல் இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
சன் குழுமத்தின் கேடிவியில் நவம்பர் 22-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து 10.30 வரை நான்கு வாரங்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை
» தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன் – சிறந்த தமிழ் படம் வாகை சூட வா
» சிறந்த நடிகை, நடிகருக்கான விருது
» சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum