இந்தி படங்கள்தான் இந்திய படங்களா?-சசி
Page 1 of 1
இந்தி படங்கள்தான் இந்திய படங்களா?-சசி
இயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்… அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது.
சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சுப்பிரமணியபுரம் திரைப்படம் தேர்வாகியிருந்ததால்தான் இந்தப் பயணம்.
இந்த அனுபவம் குறித்துப் பேசிய சசிகுமார் இப்படிச் சொல்கிறார்:
“இந்தியாவிலிருந்து வரும் படம் என்றால் முழுக்க முழுக்க பாலிவுட் படங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் வெளிநட்டவர்கள். பாலிவுட் படகலர் கலரான டான்ஸ்கள், ஏகப்பட்ட பாடல்கள், ஆடம்பர செட்கள் என்று பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டார்கள். அதனால் இந்தப் படத்திலும் அப்படி எதிர்பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது.
அவர்களுக்கு தமிழ்ப் படங்கள், இந்த பகுதியின் கலாச்சாரம் பற்றியெல்லாம் விவரமாகச் சொன்னேன். அவர்களுக்கு சுப்பிரமணியபுரம் புதிய அனுபவம். படம் பார்த்து முடித்துப் பாராட்டினார்கள். இந்தப் படத்தை ஏதாவது மேற்கத்தியப் பட பாதிப்பில் எடுத்தீர்களா என்றும் கேட்டார்கள். அவர்களுக்கு எனது சொந்த ஊரான மதுரை பற்றியும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் விளக்கிச் சொன்ன பிறகுதான் நமது சினிமாவின் இயல்பைப் புரிந்து கொண்டார்கள்…” என்றார்
இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லவிருக்கிறதாம் சுப்ரமண்யபுரம்.
தனது அடுத்த படம் பற்றி அவர் கூறுகையில், “நடிகர் விக்ரம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அபிநயா நாயகி. கதாநாயகன் வேடத்துக்கு வயதான ஒரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் செட் ஆகல…” என்றார்
இந்தப் படத்தில் தயாரிப்பாளரான விக்ரமோ, இயக்குநரான சசிகுமாரோ ஒரு பிரேமில்கூட தலைகாட்டப் போவதில்லையாம்….
இதுக்குப் பேருதான் தன்னம்பிக்கை.. கலக்குங்க!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதல் படங்கள்தான் ஸ்ரீகாந்தின் பலமாம்!
» "கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்கள்தான் காலம் கடந்து நிற்கும்'
» வேகாவின் இந்தி மூவ்
» கோச்சடையானின் இந்தி ஃப்ளேவர்
» இந்தி பொது மொழியா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum