தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரேனிகுண்டா – திரை விமர்சனம்

Go down

ரேனிகுண்டா – திரை விமர்சனம் Empty ரேனிகுண்டா – திரை விமர்சனம்

Post  ishwarya Sat Apr 27, 2013 2:44 pm

‘இஸ்திரி’ பெட்டிக்குள் விரலை நுழைத்த மாதிரி சுரீரென்ற கதை. காட்டேரிகளின் கையில் ‘கட்டாரி’யை கொடுத்த மாதிரி படார் திடீர் கொலைகள். அடி வயிற்றை கலங்கடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம்! நியாயமா ‘வென்னீர்’ செல்வம்னு வைச்சிருக்கணும். அப்படி ஒரு செல்சியசும், சென்ட்டிகிரேடும் அடிக்கிறது திரைக்கதையில்!

அப்பா, அம்மாவை பறிகொடுத்துவிட்டு, அதற்கு காரணமானவனையும் போட்டு தள்ள முடியாமல் ஜெயிலுக்கு வருகிறார் ஜானி. நுரை தள்ள வைக்கிறது சிறை. மிதி மிதியென மிதிக்கிறது போலீஸ். ஏன் இந்த சித்ரவதை என்று கலங்கி போயிருக்கும் அவரை காப்பாற்றுகிறார்கள் சக கைதிகளில் சிலர்.

“தேடிட்டு வந்து சங்க அறுப்போம்ல….” என்று நேரடியாக போலீசையே மிரட்டும் இவர்கள் சிறையிலிருந்து தப்பிக்க, பின்னாலேயே ஓடுகிறார் ஜானியும். அதன்பின் நடப்பதெல்லாம் ரத்தாபிஷேகம்! சில நேரங்களில் இந்த பசங்க கூலிப்படையா? இல்ல ஜாலிப்படையா? என்று சந்தேகப்படுகிற அளவுக்கு ரகளையடிக்கிறார்கள்.

தப்பிக்கிற அடுத்த சீன், தியேட்டரே எதிர்பார்க்கிற திகுதிகு சீன்தான். தன் அப்பா அம்மாவை கொன்றவனை இந்த புது நண்பர்கள் உதவியோடு போட்டுத்தள்ளுகிறார் ஜானி! முதல் கொலை. முதல் நடுக்கம். முதல் தயக்கம்…. நாலு பேரும் வில்லனை பிடித்துக் கொள்ள, “டேய், போடு போடு. இந்த இடத்திலே போடு” என்று அவர்கள் கிளாஸ் எடுக்கையில் திடுதிடுக்கிறது தியேட்டர்!

பின்பு ரேனிகுண்டாவுக்கு தப்பி ஓடும் அவர்களில் ஜானியை பற்றிக் கொள்கிறது லவ். போகிற இடத்திலும் ‘வெட்டாட்டம்’ ஆடுகிறது இந்த கும்பல். விடாமல் விரட்டும் தமிழ்நாட்டு போலீசும், ஆந்திர போலீசும் இவர்களை ரவுண்டு கட்ட, நால்வரும் காவு கொள்ளப்படுகிறார்கள். கடைசியாக தப்பிக்கும் ஜானியின் காதல் என்னானது என்பது குலை நடுங்க வைக்கும் முடிவு.

ஐவருமே படத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் ‘உயிரை’ கொடுத்திருக்கிறார்கள். அதிலும் அந்த டப்பா, பிரமாதமான அறிமுகம்! (தீப்பெட்டி கணேசன்) ஆள்தான் குள்ளமே தவிர, நடிப்பு ரொம்பவே உசரம்! “…ந்தாரு. மும்பை போனா நமக்கெல்லாம் பெரிய மரியாதையாம்ல…?” என்று கனவு காண்பதும், “உன் ஆளு அந்த வெள்ளை சட்ட இல்லேல்ல..?” என்று காதலிக்கு ரிசர்வேஷன் போடுகிற போதும் தியேட்டரை குலுங்க வைக்கிறார். ‘அடி ஆத்தாடி’ தெலுங்கு பாடலை கொஞ்சம் சத்தமாக வைக்க சொல்லிவிட்டு இவர் ‘தம்’ அடிப்பதை பார்ப்பதற்காகவே திரும்ப ஒரு முறை கூட தியேட்டருக்கு போகலாம். இறுதியில் தப்பித்து ஓட முடியாத இடத்தில் மாட்டிக் கொண்டு சர்வமும் அடங்க அழுகிறாரே, ஒரு கொலைகாரனுக்காக தியேட்டரையே அழ வைக்கிற சாமர்த்தியம் அது.

காதலி இவருக்குதான். அதனால் இவரே ஹீரோ என்ற ஸ்பெஷல் கோட்டாவில் வருகிறார் ஜானி. அளவான நடிப்பு. லேசான முக அசைவுகள் போதும், நினைத்ததை சொல்ல முடிகிறது அவரால்! “டேய், உங்களுக்காகத்தானே வந்தான். ஏண்டா விட்டுட்டு வந்தீங்க?” என்று அவர் பொங்குகிற காட்சியும், “வா… வா…” என்று வெறியோடு மழையிடம் பேசுகிற காட்சியும், ஆவேச அதிரடி!

டீம் தலைவனாக நடித்திருக்கும் நிஷாந்தையும் மனசுக்கு நெருக்கமாக்கி விடுகிறார் இயக்குனர்.

அழகான அறிமுகம் சனுஷா. (‘பேபி’ சனுஷா என்று அழைத்தாலும் தப்பில்லை) வாய் பேச முடியாதவளின் கோபத்தை ஒரு சாக்பீஸ் ஓவியத்தில் இறக்கி வைப்பது கவிதை என்றால், காதலனின் நண்பர்களிடம் அவர் ஆடுகிற விளையாட்டு குழந்தையின் கிறுக்கல்!

விபச்சார பெண் தொடங்கி, வில்லன் பங்கர் வரைக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் துலக்கி துலக்கி பளபளக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம். இவர்களுடன் ச்சோவென அடிக்கும் அந்த மழையும் ஒரு கேரக்டராகவே பயணிப்பது இயக்குனருக்குள் இருக்கும் ஓவியனை அடையாளம் காட்டுகிறது.

ராஜசேகரின் சண்டை இயக்கத்துக்கு தனியாக ஒரு ‘பரணி’ பாடலாம். அதிலும் அத்துவான மணற்பரப்பில் ஜீப்பில் வரும் வில்லனை போட்டுத்தள்ளும் அந்த காட்சி. பயங்கரம்ப்பா…

ஒளிப்பதிவாளர் ஷக்தியின் லாவகம் படம் முழுக்க விரவிக் கிடக்கிறது. சண்டைக் காட்சியில் ஆக்ரோஷம் காட்டும் அதே கேமிரா, சோகக் காட்சியில் ஒரு கர்சீப்பையும் சேர்த்துக் கொடுக்கும் போலிருக்கிறது. அற்புதம்! திகில் கூட்டுகிறது கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை.

ரேனிகுண்டா(ஸ்)

-ஆர்.எஸ்.அந்தணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum