டூ – திரை விமர்சனம்
Page 1 of 1
டூ – திரை விமர்சனம்
‘குஷி’ மூடில் இயக்கியிருக்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன். அதுவும் கு- பாதி, ஷி- பாதியாக பிரித்து மேய்ந்திருக்கிறார் காதல் இலக்கணத்தை. ஈகோவால் மோதிக்கொள்வதும், அடுத்த காட்சியிலேயே ஈஷிக்கொண்டு திரிவதுமாக ரசிகர்களை ஈர்க்கிறது அந்த காதல் ஜோடி. பிரிவும் சந்திப்புமாக தொடரும் காதலில் இறுதி வரை எலாஸ்டிக் டென்ஷனை கிளப்புகிறார் இயக்குனர். ஆஹா…
எதையெடுத்தாலும் ஒரே விலை என்கிற மாதிரி, எதற்கெடுத்தாலும் ஒரே முடிவு… சண்டைதான்! சஞ்சய்-நட்சத்திரா ஜோடியின் இந்த கோபம் ஒரு கட்டத்தில் பிரிவை ஏற்படுத்த, நடுவில் வருகிறாள் இன்னொருத்தி. இந்த பைபாசில் காதல் ரூட் மாறுகிறதா, அல்லது சுற்றி வளைத்து பழைய ரூட்டிலேயே பயணிக்கிறதா என்பது க்ளைமாக்ஸ்.
ரிஜிஸ்தர் ஆபிசில் பணியாற்றும் அரசு அதிகாரியாக காட்டி விடுவதால், சஞ்சயின் மெச்சூரியான முகம் உறுத்தவில்லை. சட்டென்று மூக்கில் கோபம் உட்கார்ந்து கொள்ள, நட்சத்திராவிடம் முறைத்துக் கொள்கிற காட்சிகள் எல்லாமே லைவ்வாக இருக்கிறது. ஆசை ஆசையாக இவர் நாய்க்குட்டியை பரிசளிக்க, அவரோ அய்யே… என்று ஒதுங்கிக் கொள்வதும், அதே நட்சத்திரா பின்பு நாய் வளர்க்க ட்ரை பண்ணுவதுமாக ரசனையை அள்ளி இறைத்திருக்கிறார்கள் படம் முழுக்க. சண்டை காட்சிகளில் சஞ்சய் காட்டுகிற ஆக்ரோஷத்தை பார்த்தால், ஆக்ஷன் ஹீரோ நாற்காலிக்கு ஆர்டர் கொடுக்கலாம் போலிருக்கிறது.
நட்சத்திரா மட்டும் என்னவாம்? சஞ்சய்க்கு மூக்கில் கோபம் என்றால், இவருக்குள் செ.மீ கொள்ளாமல் பரவிக்கிடக்கிறது கோபமும் அலட்டலும். மனம் இரங்கி பல நாள் கழித்து தன்னை பார்க்க வரும் சஞ்சயிடம் கொஞ்சம் கூட மனம் இரங்காமல் விரட்டி அடிக்கிற காட்சி அதிர்ச்சி. நகைச்சுவையும் நளினமாக வருகிறது நட்சத்திராவுக்கு. கிச்சனுக்குள் வந்து “இதுதான் கிச்சனா?” என்று ஊர்வசியை அதிர்ச்சியூட்டுகிறாரே, தியேட்டர் கலகலக்கிறது.
மற்றொரு நாயகியாக வருகிறார் சங்கீதா பட். அமைதியே உருவான முகம். அன்பே உருவான பார்வை. பேசாமல் முடிச்சை மாத்தி போடேன்யா… என்று சஞ்சயிடம் கெஞ்சலாம் போலிருக்கிறது. படத்திற்கு இவரது என்ட்ரி முற்றிலும் வித்தியாசம். எதிர்பாரததும் கூட.
எந்நேரமும் மென்று கொண்டேயிருக்கும் ஒரு சிறுவனை காட்டுகிறார்கள். காமெடிக்காகவாம். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் தம்பி. எவ்வளவு பிரமாதமான நகைச்சுவை நடிகர்? ஆனால் வீணாக்கியிருக்கிறார்கள் மயில்சாமியை. லொள்ளு சபா ஜீவா இருக்கிறார். பட்….
நல்லவேளை, ஜெகன் இருப்பதால் சில சீன்கள் கலகல…
டி.ராஜேந்தரின் குரல் வளத்திற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம்தான் போடுவது? ஆட்டக்காரர் சீனாவை பெண்டு நிமிர்த்துகிறது அவரது குரலும், அபிஷேக்-லாரன்சின் இசையும். தம்ம விட்டுடு மச்சான், சரக்க விட்டுடு மச்சான் என்ற இந்த பாடல் பலே உற்சாகம் பாஸ§…
இந்த படம் பார்த்துவிட்டு எத்தனை காதல் புட்டுக்குமோ, அல்லது ஒட்டிக்குமோ? எல்லா புகழும் டூ வுக்கே!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரா-1 – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» விஸ்வரூபம் – திரை விமர்சனம்
» உடும்பன் – திரை விமர்சனம்
» ‘ரௌத்திரம்’ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» விஸ்வரூபம் – திரை விமர்சனம்
» உடும்பன் – திரை விமர்சனம்
» ‘ரௌத்திரம்’ – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum