விண்மீன்கள் – திரை விமர்சனம்
Page 1 of 1
விண்மீன்கள் – திரை விமர்சனம்
நல்ல ஆரோக்கியமான குழந்தைகளையே பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில்
வீசிவிடும் இன்றைய சமுதாயத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை அதன் பெற்றோர்
எவ்வளவு சிரத்தை எடுத்துப் வளர்க்கின்றனர். அந்த குழந்தை இந்த சமூகத்தில்
எப்படிபட்ட சூழல்களை எதிர்கொள்கிறது என்பதுதான் இப்படத்தின் சுருக்கமான
கதை.
மேஜிக் கலைஞராக வரும் விஷ்வா-ஷிகா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை
பிறக்கிறது. மகிழ்ச்சியில் துள்ளும் தம்பதியினருக்கு மருத்துவர் இடி
போன்றதொரு செய்தியைச் சொல்கிறார்.
”உங்க குழந்தை ‘செரிப்ரல் பால்ஸி’ என்ற மூளை – நரம்பு மண்டலம் தொடர்பான
நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இக்குழந்தைக்கு உயிர் இருக்கும் ஆனால்
எந்த உடல் உறுப்பும் இயங்காது. அதனால் இக்குழந்தைகளுக்கென உள்ள
காப்பகத்தில் சேர்ப்பதே நல்லது” என்கிறார். விஷ்வாவின் மேஜிக் ஷோவில்
உதவியாளராக வரும் பாண்டியராஜனும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
எதற்கும் அசராத இந்த தம்பதியினர் தாமே குழந்தையை வளர்த்து வருகின்றனர்.
பையனை பள்ளியிலும் சேர்க்கின்றனர். இதனிடையே மேஜிக் ஷோவில் ஏற்படும்
குளறுபடியால் ஒரு பெண் பலியாகிறார். இதனால் விஷ்வாவின் பொருளாதாரம் நசிந்து
போகிறது. அந்நேரம் பையனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட, சிறுவன் குறைந்த
காலமே உயிர் வாழ்வான் என்கிறார் டாக்டர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்வா-ஷிகா தம்பதியினர் சென்னையிலேயே
இருந்துவிட, பாண்டியராஜனுடன் ஊட்டிக்கு வருகிறார் ராகுல் ரவீந்திரன்.
இவர்தான் ‘செரிப்ரல் பால்ஸி’ நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். படித்து
முடித்து விட்டு, பேசும் திறனுடன் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக
பணியாற்றுகிறார்.
ராகுலை சந்திக்கிறார் எழுத்தாளரான அனுஜா ஐயர். இவர் ஏற்கனவே திருமணமாகி
விவாகரத்தானவர். இவர் மேல் ராகுல் காதல் கொள்கிறார். இதனால் பிரச்சினை
எழுகிறது.
இறுதியில் என்ன ஆனார் ராகுல்? அவரது காதல் என்ன ஆனது? என்பதைச் சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் மேனன்.
பழம்பெரும் இயக்குனர் கே. சங்கரின் பேரனான விக்னேஷ் மேனன்,
அமெரிக்காவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை இப்படத்தின் கதையாக்கி
இருக்கிறார். மாற்றுத் திறனாளி குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர்களின்
நிலையையும், அக்குழந்தை இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும்
இப்படத்தில் நேர்த்தியாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
பெற்றோராக வரும் விஷ்வா-ஷிகா தம்பதியினர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கிறார்கள். தன் மகனுக்காக பள்ளியில் இடம் கேட்டு போராடுவதும்,
பிரின்ஸிபாலையே திட்டுவதும், பின் அவரிடமே மன்னிப்பு கோருவதும் சிரிக்க
மட்டுமின்றி சிந்திக்கவும் வைக்கின்றது.
அன்பான அம்மாவாக வரும் ஷிகா தன் பங்கை திறம்பட செய்திருக்கிறார்.
கோமாளியாக வரும் பாண்டியராஜன் தனது பாத்திரத்தை உணர்ந்து
கலக்கியிருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் நினைவில் நிற்கிறார்.
‘செரிப்ரல் பால்ஸி’ நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக வரும் ராகுல்
ரவீந்திரன் அற்புதமாய் நடித்திருக்கிறார். திக்கித் திக்கி பேசுவது,
கோபத்தில் கத்துவது, ஏமாற்றத்தால் மனமுடைவது என எல்லாம் கச்சிதமாய்
செய்திருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக வரும் அனுஜா ஐயர் நடிப்பில் அசத்துகிறார். நா.
முத்துக்குமாரின் வரிகளில் பாடல்கள் இதம். ஜூபின் இசை கதைக்கு வலு
சேர்க்கிறது. அனுஜா மேல் ராகுல் காதல் வயப்படும் காட்சி அழுத்தமாக இல்லை.
பாதி படத்திற்கு மேல் விஷ்வா-ஷிகா தம்பதியினரை திரையில் காட்டாமல் இருந்தது
குறை. இவைகளை சரி செய்திருக்கலாம்.
அதிரடி சண்டை காட்சிகளின்றி, ஆபாச வசனங்களின்றி, யதார்த்தமான விண்மீனை காட்சிப்படுத்திய இயக்குனரை பாராட்டலாம்.
விண்மீன்கள் – மின்னும்..!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விமர்சனம்: விண்மீன்கள்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum