விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து
Page 1 of 1

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நேற்றிரவு ரத்து செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது. தமிழகம் முழுவதும் பர பரப்பாக எதிர்பார்க்கப் பட்ட விஸ்வரூபம் படத்தின் தீர்ப்பு இரவு 8 மணிக்கு ஐகோர்ட்டில் அறிவிக்கப்படும் என்று முதலில் நீதிபதி வெங்கட் ராமன் அறிவித்திருந்தார். ஆனால், இரவு 10 மணிக்கு தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் வெங்கட்ராமன் கூறியதாவது:
விஸ்வரூபம் படம் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. திடீரென்று 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததால் கமல் ஹாசனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர்களிடம் எந்தவித புகாரும் வரவில்லை. ஒட்டு மொத்தமாக 31 மாவட்டங் களை சேர்ந்த கலெக்டர் களும் ஒரே உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரி கிறது. குறிப்பாக 2 மாவட்ட கலெக்டர்களின் உத்தரவை பார்க்கும் போது, எந்த முஸ்லிம்கள் புகார் தெரிவித்தனர் என்று புகாரில் குறிப்பிடவில்லை.
எனவே, 144 தடை உத்தரவை நிறுத்தி வைக் கிறேன். இதற்கு முகாந்திரம் உள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லிம்கள் கோரிக்கையை சம்பந்தப் பட்ட அமைப்பிடம் முறை யிடலாம். இதற்கு இந்த உத்தரவு தடையாக இருக் காது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமையாகும். தடை உத்தரவில் சரியான காரணம் கூறப்படவில்லை. எனவே, அரசு உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். இந்த தடை உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல் லையா? என்பது குறித்து பின்னர் முழுமையாக விசாரணை நடத்தி முடிவு எடுக்கலாம். இவ்வாறு தனது தீர்ப்பில் கூறினார்.
நீதிபதி தீர்ப்பை கேட்ட தும் தமிழக அரசின் அட் வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், கூடுதல் அட் வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி இந்த வழக்கை உடனே நிறுத்தி வைக்க வேண்டும். நாளை காலை அப்பீல் செய்ய உள்ளோம். உடனே தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் விடியற்காலை 5 மணிக்கே படத்தை திரையிட்டு விடுவார்கள் என்று கூறினர். இதை நீதிபதி ஏற்க மறுத்து கோர்ட்டை விட்டு இறங்கி சென்றார். விஸ்வரூபம் படம் தீர்ப்பு வழங்கப்பட்டதை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஐகோர்ட்டு தீர்ப்பை கேட்டதும் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் விஸ் வரூபம் படத்தை திரையிட கமல்ஹாசன் ரசிகர்கள் தீவி ரம் காட்டி வருகிறார்கள்.
விஸ்வரூபம் பட வழக்கில் பரபரப்பு வாதம்
சென்சாரில் முறைகேடு நடந்துள்ளது , தமிழக அரசு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை , மத்திய அரசு
சென்னை : கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் டிசம்பர் 25,ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை தடை செய்ய கோரி முஸ்லிம் அமைப்புகள் அரசிடம் மனு கொடுத்தன. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு 15 நாள் தடை விதித்தது. அரசின் உத¢தரவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கமல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார் பில் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 26ம் தேதி படத்தை பார்த்தபின்னர் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 28ல் நடத்தப்படும் என்று உத்தரவிட்டார். இதன் படி, 26ம் தேதி நீதிபதி வெங்கட்ராமன், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு உள்ளிட்ட 50 பேர் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் விஸ்வரூம் திரைப்படத்தைப் பார்த்தனர்.
இதையடுத்து, வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ‘விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். விரும்பினால், இந்த வழக்கில் புதிய மனு தாக்கல் செய்யுங்கள். நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமைதான் முக்கியம். எனவே அரசு அதிகாரிகளையும் சம்பந்தப்பட்டவர்களையும் கமல் சந்தித்து பேசி சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’ என்று கமலுக்கு ஆலோசனை கூறி வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பாக மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதாடியதாவது:
‘விஸ்வரூபம்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்கிய மத்திய தணிக்கை குழுவில் முஸ்லிம் உறுப்பினர் இருந்துள்ளார். ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்தான் இந்த படத்தில் உள்ளது. முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை.
இந்த படத்தின் கதாநாயகனே ஒரு முஸ்லிம்தான். நல்ல மனிதராக அவர் நடித்துள்ளார். இப்படிப்பட்ட படத்துக்கு மத்திய தணிக்கை குழு அனுமதி வழங்கிய பிறகு அதற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. சுப்ரீம் கோர்ட் பலமுறை இதை உறுதி செய்துள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை, படைப்புரிமைக்கு இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பு உள்ளது.
‘டாவின்சி கோட்’ என்ற ஆங்கில திரைப்படத்துக்கு அப்போதைய தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து அப்போது வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனர லாக இருந்து நான்தான் வாதாடினேன். அப்படி இருந்தும் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு உத்தரவுக்கு தடை விதித் தார்.
அந்த உத்தரவை இந்த வழக்கிலும் பின்பற்றி விஸ்வரூபம் படத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.
‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற திரைப்படத்துக்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ் செல்லும் என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் விசாரித்து, தணிக்கை சான்றிதழ் கொடுத்தது தவறு என தீர்ப்பளித்தனர். உச்ச நீதிமன்றத்துக்கும் இந்த வழக்கு சென்றது. 3 நீதிபதிகள் தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியது. இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஸ்வரூபம் படத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. உத்தரவு நகலை மாவட்ட கலெக்டர் மூலமாக 31 தியேட்டர்களுக்கு அவசர அவசரமாக அனுப்பியுள்ளனர். இது தவறானது. ஸீ 100 கோடி செலவில் விஸ்வரூபம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா போட்டோகிராபி சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதேபோல புதுவை அரசும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்திருப்பது செல்லாது. மும்பையில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கேயும் படத்தை திரையிட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு பி.எஸ்.ராமன் வாதாடினார். முஸ்லிம் அமைப்பு சார்பாக வக்கீல் ஒருவர் குறுக்கிட்டு, ‘இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இந்த வழக்கு தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது’ என்றார். இதை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கை அமைதியான முறையில் நடத்த விரும்புகிறேன். தேவையற்றதை பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள். வழக்கின் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக அதிக நேரம் ஒதுக்கியுள்ளேன். இரு தரப்பு வக்கீல்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ‘விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என உளவுத்துறை மூலம் அரசுக்கு தகவல் கிடைத்தது. எனவேதான் தடை விதிக்கப்பட்டது. சினிமா போட்டோகிராபி சட்டப்படி தடை விதிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தடையை நீக்கக்கூடாது. இந்த படத்தில் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதால்தான் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியதே தவறானது. அதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த படத்தை வெளியிட்டால் பொது அமை திக்கு குந்தகம் ஏற்படும். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ‘டேம் 999‘ என்ற படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது சரியானது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியுள்ளது. இதை ஐகோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.
தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘சட்டம் ஒழுங்கை பாதுகாக்க படத்தை தடை விதிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. பொதுநலன் கருதி தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை 31 மாவட்ட கலெக்டர்களும் தியேட்டர்களுக்கு அனுப்பி உள்ளார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தொடர்ந்து 1998ம் ஆண்டு முதல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்த படம் திரையிடப்பட்டால் அசம்பாவித சம்பவம் ஏற்படும். எனவே, இந்த தடையை நீக்க கூடாது‘ என்றார்.
முஸ்லிம் அமைப்பு சார்பாக வக்கீல் சங்கர சுப்பு ஆஜராகி, ‘முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் படம் உள்ளது. இதற்கு தடை விதித்ததை நீக்க கூடாது. விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்றார். கமல்ஹாசன் தரப்பில் வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘துப்பாக்கி படத்துடைய உயர்நீதிமன்றம் தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தணிக்கை குழுவிடம் முறையிடலாம் என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே, தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். என்றார்.
மத்திய அரசின் தணிக்கை குழு சார்பாக கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ‘தணிக்கை குழு மீது கூறப்பட்டுள்ள குற்றசாட்டு முழுவதும் தவறானது. விதிமுறைகளை பின்பற்றி படத்தை பார்த்து தணிக்கை குழு விஸ்வரூபம் படத்துக்கு ‘யுஏ‘ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, இதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்: சோ கருத்து
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை
» விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு!!
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum