திருமணத்துக்கு முன்பே `தேனிலவு': பரவிவரும் `பகீர்' கலாசாரம்
Page 1 of 1

தேசிய ஆரோக்கியப் புள்ளிவிவர மையம் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் `சேர்ந்து வாழும்' ஜோடிகள் அதிகரித்து வருகிறார்கள். அவர்களில் 40 சதவீதம் பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இதெல்லாம் பெருநகரங்களில் நடக்கும் சங்கதி என்று நாம் சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது. `லிவ்-இன்' ஜோடிகளில் 50 சதவீதம் பேர், இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
``ரொம்பக் கட்டுப்பாடான குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்களுக்கு இது, (அதாவது, ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது) ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது. சேர்ந்து வாழ்வது சுதந்திரமானது, பிரச்சினையில்லாதது என்பது அவர்களின் எண்ணம். இப்போதெல்லாம் உணர்வு ரீதியான பிணைப்புகளுக்கு இங்கு இடமில்லை. இந்தத் தேனிலவுக் காலத்தை முடிந்த அளவு அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.
இது நீண்டகாலம் ஓடாது என்று தெரிந்தே இதில் ஈடுபடுகிறார்கள். இளம்பருவத்தினருக்கு இது ரொம்ப நல்ல, வசதியான முறையாகத் தெரியும் அதேவேளையில், சமூகவியல் நிபுணர்கள் திகைத்து நிற்கிறார்கள். திருமணத்துக்கு முந்தைய இந்த `தேனிலவு' நிச்சயம் ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும்.
சம்பந்தப்பட்டவர்கள் இன்று இதை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் வருங்காலத்தில் இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரிக்கைக் குரல் கொடுக்கிறார், சமூகவியல் பேராசிரியையான பத்மா பிரியதர்ஷினி. ஆனால், `லிவ்-இன் ரிலேசன்ஷிப்'பில் ஆர்வம் காட்டுவோர், `காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான ஒரு `டிரெண்டு'க்கு, தங்கள் பெண்கள், பிள்ளைகளை கவனிக்காத பெற்றோர் ஒரு முக்கியக் காரணம் என்று குற்றஞ்சாட்டும் சமூகவியலாளர்கள், இது சீரியசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். ``இந்த மாதிரியான ஒரு நடத்தை, அந்த நேரத்தில் சந்தோஷம் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
சட்டையைக் கழற்றுவதைப் போல ஓர் உறவை உதறிவிட்டு, அதே பொறுப்போடு இன்னோர் உறவில் நுழைவது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய நபர்கள், தங்களுக்கும் உண்மையாயில்லை, தமது பெற்றோருக்கும் உண்மையாயில்லை, வாழ்க்கைத் துணைக்கும் உண்மையாயில்லை.
இன்றைய சூழலில் பாலின பேதம் பாராமல் பழகுவது தவறில்லை. ஆனால் அது படுக்கை வரை போய்விடக் கூடாது'' என்று எச்சரிக்கைக் கொடி பிடிக்கிறார்கள். இன்றைய இன்பமே வேதம் என்று ஓடும் இளைய சமுதாயத்தின் காதில் விழுமா?

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணத்துக்கு முன்பே தேனிலவு: தேசிய குடும்ப நல மையத்தின் சர்வே
» டாட்டூ கலாசாரம்
» நமது பாரத கலாசாரம்
» எமி ஜாக்சனை ஈர்த்த இந்திய கலாசாரம்!
» ஐந்தாண்டு கழித்து அரசியல்! – சோனா பகீர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum