தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபராதத்துடன் அட்வான்ஸைத் திருப்பி தர ஸ்ரேயாவுக்கு உத்தரவு!

Go down

அபராதத்துடன் அட்வான்ஸைத் திருப்பி தர ஸ்ரேயாவுக்கு உத்தரவு! Empty அபராதத்துடன் அட்வான்ஸைத் திருப்பி தர ஸ்ரேயாவுக்கு உத்தரவு!

Post  ishwarya Fri Apr 26, 2013 1:33 pm

பொல்லாதவன் படத்தைத் தயாரித்த கதிரேசன், அடுத்த படம் ஒன்றுக்காக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தார். இந்தப் படத்துக்காக ரூ 10 லட்சம் அட்வான்ஸும் ரொம்ப நாளைக்கு முன்பே ஸ்ரேயாவுக்கு தரப்பட்டது.

ஆனால் திடீரென்று இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று ஸ்ரேயா தெரிவித்துவிட, விவகாரம் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குப் போய் விட்டது.

விவரத்தைக் கேட்டவர்கள், கதிரேசன் கொடுத்த அட்வான்ஸை உடனே திருப்பித் தரவேண்டும் என்று ஸ்ரேயாவுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, படத்தில் நடிக்க காரணமில்லாமல் மறுத்தது, இதனால் தயாரிப்பாளர் அடைந்த மன உளைச்சல் போன்றவற்றுக்கு அபராதமாக ரூ 5 லட்சம் தரவேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

தமிழில் பெரிதாக படம் இல்லாத ஸ்ரேயாவுக்கு இது பெரிய அதிர்ச்சியாகி விட்டதாம். “ரஜினியுடன் இவர் நடித்த சிவாஜி மட்டும் வராமல் போயிருந்தால் இந்த உயரத்துக்கே வந்திருக்க மாட்டார் ஸ்ரேயா. ஆனால் கிடைத்த இடத்தைத் தவறவிட்டு, இப்போது தயாரிப்பாளர்களுக்கும் பிடிக்காத நடிகையாகிவிட்டாரே” என்றார் தயாரிப்பாளர் சங்க பிரமுகர் ஒருவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum