வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியது
Page 1 of 1
வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியது
குழந்தையை சுமப்பது வேண்டுமானால் சுகமான சுமையாக இருக்கலாம். ஆனால் வேலைப் பளுவையும் சேர்த்து சுமப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்யலாம்? இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிது காலத்திற்கு காலை வேளைக்கு மாற்றிக் கொள்ளலாம். நிறைய ஓய்வு தேவைப் படுவதாலும், இரவு தூக்கம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மிக முக்கியம் என்பதாலும் உயர் அதிகாரியிடம் பேசி வேலை நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
சில மாதங்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுக்காத, சிறிது சுலபமான வேலையை கொடுக்குமாறு உங்கள் மேலதிகாரியிடம் கேட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு வருடத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் உண்டோ அவற்றை சேமியுங்கள். குழந்தை பிறந்தபின் எடுக்கலாம். குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை மறுபடி சீர்படுத்திக் கொள்ளவும் இந்த நாட்கள் உதவும்.
நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை ஆரம்ப நாட்களிலேயே உங்கள் பணி இடத்தில் மேலதிகாரியிடம் சொல்லுவது நல்லது. அடுத்த சில மாதங்களிலேயே நீங்கள் விடுமுறையில் போவது தெரிந்து குறைந்த நாட்களில் முடிக்கும் படியான வேலையை அவர் உங்களுக்கு கொடுக்க சம்மதிப்பார். உங்களது இடத்தில் இன்னொருவரைத் தயார் செய்வதும் அவருக்கு சுலபமாக இருக்கும். மிகவும் சிரமமாக இருக்கும் நாட்களில் உங்களுடன் கூட வேலை செய்பவர்களின் உதவியை நாடுங்கள்.
பேருந்துகளில் வேலைக்குச் செல்லுபவராக இருந்தால் சற்று முன் கூட்டியே பேருந்து நிலையத்திற்கு சென்று விடுங்கள். இதனால், அதிக கூட்டம், அதிக நேரம் பேருந்திற்காக நிற்பது போன்றவற்றை தவிர்க்கலாம். பேருந்திலிருந்து இறங்கும் போதும் ஏறும்போதும் அதிக எச்சரிக்கைத் தேவை. இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுவது, அல்லது பின்னால் உட்கார்ந்து செல்வதை தவிருங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமருவதைத் கூடிய மட்டும் தவிர்த்து விடுங்கள். அலுவலகத்தில் அவ்வப்போது சிறிது நடப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமை
» ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
» ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
» கர்ப்பிணி பெண்கள்
» மாதவிலக்கு பிரச்சனையில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
» ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
» ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
» கர்ப்பிணி பெண்கள்
» மாதவிலக்கு பிரச்சனையில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum