‘சாமி’ன்னாலே வில்லங்கம்தான்! – பாக்யராஜ் கலகல!
Page 1 of 1

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை சாமி என்றாலே வில்லங்கம்தான், விவாதத்துக்குரிய விஷயம்தான் என்றார் இயக்குநர் பாக்யராஜ்.
‘உயிர்,’ ‘மிருகம்’ ஆகிய சர்ச்சைகளுக்குரிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமி இப்போது, ‘சிந்து சமவெளி’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இவர், ‘நாடோடிகள்,’ ‘கோரிப்பாளையம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர்.
‘சிந்து சமவெளி’ படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல் குறுந்தகடை, பட அதிபரும், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளருமான எல்.கே.சுதீஷ் வெளியிட்டார்.
விழாவில் பேசிய முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இயக்குநர் சாமி பற்றி குறிப்பிடும் போது, ‘அவர் மிகுந்த சர்ச்சைக்குரியவர். அவர் இயக்கிய படங்களும் பிரச்சினைக்குரிய கதையம்சம் கொண்டவை’ என்று குறிப்பிட்டனர்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “சாமி என்றாலே வில்லங்கமான, விவாதத்துக்குரிய விஷயம்தான். சாமி இருக்கிறதா, இல்லையா? என்று ஒரு விவாதம். பிரேமானந்தா சாமி முதல் நித்யானந்தா சாமி வரை வில்லங்கம். மகாபாரதத்தில் கூட, விவாதத்துக்குரிய விஷயங்கள் உள்ளன. தேவர்களுக்கு தலைவனாக இருக்கும் இந்திரன் வேடம் போட்டு முனிவரின் மனைவியை அணுகியது போல் புராணத்தில் நிறைய விவாதத்துக்குரிய விஷயங்கள் உள்ளன.
அதுபோல் சாமி டைரக்டு செய்த `உயிர்’ படம் விவாதத்துக்குரிய கதையம்சம் உள்ள படம்தான். மைத்துனர் மீது அண்ணி ஆசைப்படுகிற கதை. அந்த படம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
ஒரு பாதிரியார் பாரீஸ் வந்து இறங்கினார். அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர், ‘நைட் கிளப்புக்கு போவீர்களா?’ என்று கேட்டார். பாதிரியார், ‘நைட் கிளப்புன்னா என்ன, அது எங்கே இருக்கிறது?’ என்று திருப்பி கேட்டார். மறுநாள் பத்திரிகையில், ‘பாதிரியார் பாரீஸ் வந்து இறங்கியதும், நைட் கிளப் எங்கே இருக்கிறது? என்று கேட்டார்’ என்று செய்தி பிரசுரமாகி இருந்தது.
உடனே பாதிரியார் அந்த நிருபரிடம், ‘என்னங்க இப்படி செய்தி போட்டுட்டீங்க?’ என்று கேட்டார். அதற்கு அந்த நிருபர், ‘நீங்க என்ன சொன்னீங்க? நைட் கிளப்புன்னா என்ன என்றும், அது எங்கே இருக்கிறது? என்று கேட்டீங்க. எங்கே இருக்கிறது? என்று நீங்க கேட்டதை பத்திரிகையில் போட்டு இருக்கிறேன். அவ்வளவுதான்’ என்றார்.
அதனால் விவாதத்துக்குரிய விஷயங்களையும், பிரச்சினைக்குரிய விஷயங்களையும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்…,” என்றார்.
விழாவில் டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பார்த்திபன், விக்ரமன், சேரன், பட அதிபர்கள் `கலைப்புலி’ எஸ்.தாணு, மைக்கேல் ராயப்பன், அன்பு செழியன், கல்யாண், செந்தில், கதிரேசன், ஆர்.பாலாஜி, வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், நடிகர் ஆதி உள்ளிட்டோர் பேசினர்.
பி.டி.செல்வகுமார் வரவேற்று பேசினார். இயக்குநர் சாமி நன்றி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கலகல கடைசிப் பக்கம்
» வடக்குன்னா கலகல.. தெற்கேன்னா லகலக – இது த்ரிஷா!
» மீண்டும் பாக்யராஜ்
» அ.தி.மு.க.வில் இணைகிறார் பாக்யராஜ்…!
» “பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum