வம்சம் – திரை விமர்சனம்
Page 1 of 1
வம்சம் – திரை விமர்சனம்
ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை.
கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தினரும் கவுரவுவிக்கப்படுகின்றனர். எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடா வம்சத்தினரான அருள் நிதிக்கும் மாலை மரியாதை கிடைக்கிறது. அவ்விழாவுக்கு வரும் இன்னொரு வம்சத்துக்காரர் ஜெயப்பிரகாஷ் அடியாட்களிடம் அருள் நிதியை தீர்த்து கட்ட சொல்கிறார்.
இருவருக்கும் உள்ள பகை பிளாஸ்பேக்கில் விரிகிறது.
ஊரையே கலக்கும் ரவுடி கிஷோருக்கு பெண் கொடுக்க பலரும் மறுக்கின்றனர். தனது வம்சம் அழியாமல் காக்க முறைப் பெண்ணை கடத்தி தாலி கட்டுகிறார். திருமணத்துக்கு பின் திருந்துகிறார். கிஷோரை முன் பகையால் ஜெயப்பிரகாஷ் விஷம் வைத்து கொல்கிறார். அப்போது கிஷோர் மனைவி கர்ப்பம் தரிக்கிறார் குழந்தை பிறந்ததும் அப்பா சாயல் இன்றி நல்லவனாக வளர்க்கிறார். வளர்ந்து அருள்நிதியானதும் பக்கத்து ஊரை சேர்ந்த சுனேனாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர். சுனேனா தந்தையையும் ஆள் வைத்து கொல்கிறார் ஜெயபிரகாஷ். அவரை சுனேனா பழி தீர்க்க முயற்சிக்கிறார். இருவருக்கும் பகை வளர்கிறது. சுனேனாவை பழி வாங்க சதி திட்டங்கள் உருவாகிறது. அப்போது சுனேனாவுக்கு துணையாக நிற்கிறார். அருள்நிதி. இதனால் வெறுப்பு அவர் மீது திரும்புகிறது.
நடக்கும் திருவிழாவில் அருள்நிதிக்கும் ஜெயப்பிரகாஷ் அடியாட்களுக்கும் நடக்கும் மோதலும் யார் ஜெயிக்கிறார் என்பதும் கிளைமாக்ஸ்…
அருள்நிதி கிராமத்து இளைஞன் கெட்டப்பில் வெளுத்து கட்டுகிறார். காதல் கோபம், பாசம், வேகம், சண்டை என அனைத்திலும் யதார்த்தங்களை பிழிந்து முத்திரை நடிப்பை பதிய வைக்கிறார்.

தனது பசு மாட்டை விலைக்கு வாங்கும் சுனேனாவை அந்த பசுவை வைத்தே மடக்கும் சீன்கள் கலகலப்பானவை. தன்னை தாக்க வரும் ரவுடிகளை தந்திரமாக குளத்தில் இறக்கி மின்சாரத்தை நீருக்குள் பாய்ச்சி விடுவதாக மிரட்டுவது அமர்க்களம்.
வில்லன் கூட்டத்தோடு மோதும் கிளைமாக்ஸ் சண்டையில் அனல் பறத்துகிறார். தமிழ் திரையுலகில் நிலையான இடம் பிடிக்க அத்தனை அம்சங்களும் கொண்ட நடிகராக ஒளிர்கிறார்.
அடாவடி கிராமத்து பெண்ணாக கலக்குகிறார் சுனேனா.. தந்தையை கொன்றவனை முச்சந்தியில் சாணியை கறைத்து ஊற்றி அவமான படுத்துவது அழுத்தம்.
குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடிப்பவராக வரும் கஞ்சா கருப்பு அருள்நிதியுடன் சேர்ந்து செய்யும் காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது. கிஷோர் சிறிது நேரம் வந்தாலும், ரவுடி ரத்தினமாக வாழ்கிறார். அவரது மனவியாக வரும் அனுபம் குமார் நிறைவு. தாஜ்நூரின் இசையில் பாடல்களில் கிராமிய மணம்.
படத்தின் நீளமும் மிகையான திருவிழா காட்சிகளும் திருஷ்டி.
வம்சங்களின் பகை, குளத்தில் மீன் பிடித்தல், சிக்னல் கிடைக்காமல் மர உச்சியில் ஏறி செல்போனில் பேசுதல், தொலைவில் இருப்பவர்களிடம் செய்தி சொல்ல ஓ வென்று அழைத்து பேசுதல் என கிராமத்து வாழ்க்கையை உயிரோட்டமாக காட்சி படுத்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வம்சம் – திரைப்பட விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum