தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒல்லி நடிகைகளை விரும்பும் தமிழ் ரசிகர்கள் – ரம்யா நம்பீசன்

Go down

ஒல்லி நடிகைகளை விரும்பும் தமிழ் ரசிகர்கள் – ரம்யா நம்பீசன் Empty ஒல்லி நடிகைகளை விரும்பும் தமிழ் ரசிகர்கள் – ரம்யா நம்பீசன்

Post  ishwarya Wed Apr 24, 2013 5:02 pm

சேரனுடன் “ராமன் தேடிய சீதை” படத்தில் நடித்தவர் ரம்யா நம்பீ சன். தற்போது ஷக்தி ஜோடியாக “ஆட்டக்காரன்” படத்தில் நடிக்கிறார். கிருஷ்ணாராம் இயக்குகிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

தமிழ் படங்களில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் உள்ளது. நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின் என பலர் மலையாளத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் வந்து இருக்கிறேன்.

கேரளாவில் நடிகைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரியப்படுவார்கள். ஆனால் தமிழக ரசிகர்கள் ஒல்லியான நடிகைகளையே விரும்புகிறார்கள். எனவே தான் நான் கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறி இருக்கிறேன்.

“ஆட்டக்காரன்” படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். ஆரம்பத்தில் தமிழ் பேசி நடிக்க சிரமப்பட்டேன். ஆனால் கொஞ்ச நாளிலேயே தமிழ் கற்று நன்றாக பேச ஆரம்பித்தேன். விறுவிறுப்பு, காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லா அம்சமும் “ஆட்டக்காரன்” படத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum