தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு: அஜீத் படத்தில் இருந்து நீது சந்திரா நீக்கம்

Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு: அஜீத் படத்தில் இருந்து நீது சந்திரா நீக்கம் Empty கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு: அஜீத் படத்தில் இருந்து நீது சந்திரா நீக்கம்

Post  ishwarya Wed Apr 24, 2013 12:24 pm

அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் கதாநாயகியாக நீது சந்திராவை ஒப்பந்தம் செய்தனர். இவர் ஏற்கனவே மாதவன் ஜோடியாக யாவரும் நலம் என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர். அஜீத் ஜோடியாக நடிக்கும் தகவலை நீது சந்திராவே வெளியிட்டு சந்தோஷத்தை வெளிபடுத்தி இருந்தார். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது திடீரென நீது சந்திரா இப்படத்தில் இருந்து நீக்கப்படடு உள்ளார். அவருக்கு பதில் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்ட மோசடியில் நீது சந்திரா பெயர் அடிபட்டதே இந்த நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் மோதிய டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் ஸ்பாட் பிக்சிங் என்ற கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரது காதலியான பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் கூறும் போது, சூதாட்ட தரகர்களுடன் முகமது ஆசிப் தொடர்பு வைத்திருந்த விஷயங்கள் நடிகை நீது சந்திராவுக்கு தெரியும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து கிரிக்கெட் ஊழல் தடுப்பு குழுவினர் நீது சந்திராவிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் நீது சந்திராவின் இமேஜ் இறங்கியுள்ளதால் மங்காத்தா படத்தில் இருந்து தூக்கி விட்டனர்.

திரிஷாவிடம் இதில் நடிப்பது பற்றி கேட்ட போது அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள் என்றார். கமல் ஜோடியாக மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அது முடிந்ததும் மங்காத்தா படத்துக்கு வருகிறார். ஏற்கனவே கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்துள்ளார். தனது டுவிட்டர் இணைய தளத்தில் எனக்கு எதிர்பாராத சந்தோஷங்கள் நிறைய நடந்து வருகின்றன என்று குறுப்பிட்டு உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum