தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் ஒரு வாரம் ரஜினி பட விழா: பழைய படங்கள் திரையிடப்படுகிறது

Go down

சென்னையில் ஒரு வாரம் ரஜினி பட விழா: பழைய படங்கள் திரையிடப்படுகிறது Empty சென்னையில் ஒரு வாரம் ரஜினி பட விழா: பழைய படங்கள் திரையிடப்படுகிறது

Post  ishwarya Wed Apr 24, 2013 12:05 pm

வில்லிவாக்கத்தில் உள்ள ஏ.ஜி.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் இந்த திரைப்பட விழா நடக்கிறது. இன்று மாலை இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ரஜினியின் ஹிட் படமொன்று திரையிடப்படுகிறது.

இன்று மாலை ரஜினியின் “அண்ணா மலை” படம் திரையிடப்படுகிறது. இப்படத்தில் ரஜினி ஜோடி குஷ்பு. வந்தேன்டா பால்காரன், ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள், கொண்டையில் தாழம்பு போன்ற பாடல்கள் இதில் உள்ளன

நாளை ரஜினி, விஜய சாந்தி ஜோடியாக நடித்த மன்னன் படம் திரையிடப்படுகிறது. இதில் இடம் பெற்ற அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். இப்படத்தில் வரும் அடிக்குது குளிரு அது சரி அது சரி என்ற பாடல் ரஜினி சொந்த குரலில் பாடியது.

நாளை மறுநாள் (26-ந்தேதி) ரஜினி-மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் திரையிடப்படுகிறது. இதில் இடம் பெற்ற ராக்கம்மா கையை தட்டு, காட்டுக் குயில் மனசுக்குள்ளே பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

27-ந்தேதி குரு சிஷ்யன் படமும், 28-ந்தேதி முரட்டுக்காளை படமும் திரையிடப்படுகிறது.

29-ந்தேதி முத்து படம் திரையிடப்படுகிறது. இதில் மீனா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் வரும் ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி, தில்லானா தில்லானா, குலுவாலிலே பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.

30-ந்தேதி ஜோதிகாவுடன் நடித்து வெற்றிகர மாக ஓடிய Òசந்திரமுகிÓ படம் திரையிடப்படுகிறது.

விழாவையொட்டி ஏ.ஜி.எஸ். தியேட்டர் முன்பு ரஜினி ரசிகர்கள் கொடி, தோரணம் கட்டி உள்ளனர். கட்-அவுட்களும் வைக்கப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» கதைக்கு பஞ்சமோ பஞ்சம்… ரீமேக்கில் 9 பழைய தமிழ்ப் படங்கள்!
» ஆண்டின் இறுதி வாரம்… ரிலீசுக்கு தயாராகும் அரை டஜன் படங்கள்
» சென்னையில் ஜப்பான் பட விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum