மனைவிகளை ஒதுக்குவது பேஷனாகி விட்டது: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் மீது மன்சூர் அலிகான் தாக்கு
Page 1 of 1

பிரபுதேவா நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன் என்று அறிவித்து உள்ளார். இவருக்கு மனைவி ரம்லத்தும் இரு மகன்களும் உள்ளனர்.
இதனை நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, மனைவிகளை ஒதுக்குவது இப்போது பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது.
கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது போல் ஆகி விடக்கூடாது.
இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். ஊட்டியில் படப்பிடிப்புக்கு சென்றபோது காலை 7 மணிக்கு மதுக்கடையில் குவிந்து நின்ற இளைஞர்களை பார்த்து கலங்கினேன்.
நான் நடிக்கும் “ரதம்” படத்தில் இதனை காட்சியாக்கியுள்ளோம். நான் அப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடிக்கிறேன். குடிகாரனாக இருந்து திருந்துவதுபோல் என் கேரக்டர் இருக்கும். நல்லவனாக மாறிய பிறகு சாராயம் குடிப்போரை பார்த்து தந்தையர்களே தயவு செய்து குடிக்காதீர்கள் குடிகுடியை கெடுக்கும். குடித்தவன் குடலை கெடுக்கும்.
கிட்னியை கொல்லும், கல்லீரலை சல்லடையாக்கும். வாய் நாறி, கண் சிவந்து மூச்சு விட முப்பது அடி நாறும். குழந்தைகள் தூரப்போகும். நீ கட்டிய மனைவி கரண்டியை வீசி சண்டை போடுவாள். உன் குழந்தைகள் கடைக் கோடியில் பிச்சை எடுக்கும். ஆகவே குடிக்காதீர்கள் என்று வசனம் பேசுவேன். இந்த காட்சியை இயக்குனர் ரியாஸ் ஒரே டேக்கில் எடுத்தார்.
ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ்குமார் இதை தயாரிக்கிறார். இப்படத்தை பார்ப்பவர்கள் பாதிபேர் குடிப்பதை நிறுத்தி திருந்துவார்கள்.
இவ்வாறு மன்சூர்அலி கான் கூறினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை
» நயன்தாரா - 'பச்சை'யாக பேசிய மன்சூர் அலிகான்
» விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்
» ப்ளூபிலிமை விட மோசமான படத்தைக் காட்டுறாங்களே… மன்சூர் அலிகான் கடும் காட்டம்!
» பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum