ப்ளூபிலிமை விட மோசமான படத்தைக் காட்டுறாங்களே… மன்சூர் அலிகான் கடும் காட்டம்!
Page 1 of 1
ப்ளூபிலிமை விட மோசமான படத்தைக் காட்டுறாங்களே… மன்சூர் அலிகான் கடும் காட்டம்!
சென்னை சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாவில் ப்ளூ பிலிமை விட மோசமான படங்களைக் காட்டுவதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் கோபமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.: சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் புளுபிலிமை விட மோசமான வக்கிரமான திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இது நமது கலாச்சாரத்தை சீர் குலைக்கும். கிளிப் என்ற படத்தை பார்த்தேன். அது மோசமான ஆபாச காட்சிகளின் தொகுப்பாக இருந்தது. நம் நாட்டில் தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமனார், சித்தி, சித்தப்பா என கூட்டு குடும்ப உறவு முறைகள் உள்ளன. அவற்றை குழி தோன்டி புதைப்பது போல் இந்த படங்கள் உள்ளன. ஆபாச படங்களை தடுக்க தணிக்கை குழு உள்ளது. இத்தகு மோசமான படங்களை தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிடுவது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சினிமா மக்களை கெடுக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற ஆபாச படங்களை பார்த்தால் சமுதாயம் குட்டிச் சுவராகி சீர் குலையும். விழாவை முன்னின்று நடத்தும் நடிகை சுகாசினி இது போன்ற கீழ்த்தரமான வக்ரம் நிரம்பிய படங்களை இங்கே கொண்டு வந்து காட்டுவது கண்டனத்துக்குரியது. இப்படங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் பட விழாவுக்கு தமிழக அரசு பெரும் நிதியுதவி அளித்து ஊக்கம் வேறு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாரா - 'பச்சை'யாக பேசிய மன்சூர் அலிகான்
» விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை
» மனைவிகளை ஒதுக்குவது பேஷனாகி விட்டது: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் மீது மன்சூர் அலிகான் தாக்கு
» தீபிகாவுக்கு மோசமான நடிகை, ரா ஒன்னுக்கு மோசமான படத்திற்கான விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum