தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழர்கள் கண்பார்வை இழப்பு: நடிகை அசினுக்கு வக்கீல் நோட்டீசு; நஷ்டஈடு வழங்க வேண்டும்

Go down

இலங்கை தமிழர்கள் கண்பார்வை இழப்பு: நடிகை அசினுக்கு வக்கீல் நோட்டீசு; நஷ்டஈடு வழங்க வேண்டும் Empty இலங்கை தமிழர்கள் கண்பார்வை இழப்பு: நடிகை அசினுக்கு வக்கீல் நோட்டீசு; நஷ்டஈடு வழங்க வேண்டும்

Post  ishwarya Tue Apr 23, 2013 4:20 pm

நடிகை அசின் சமீபத்தில் “ரெடி” இந்திப்படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றபோது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்தித்தார்.

நடிகர்- நடிகைகள் இலங்கை செல்லக்கூடாது என்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட துறையின் கூட்டு நடவடிக்கை குழு தடை விதித்து இருந்தது. அதை மீறி இலங்கை சென்றார்.

தமிழர் பகுதிகளில் சுற்றி பார்த்த அவர் தனது சொந்த செலவில் கண் சிகிச்சை முகாம்களை நடத்தினார். டாக்டர்களை வரவழைத்து இலங்கை தமிழர்களுக்கு கண் அறுவை சிகிச்சையும் செய்ய வைத்தார். 10 ஆயிரம் தமிழர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய நிதி உதவி செய்வேன் என்றும் அறிவித்தார்.

இந்த முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேர் பார்வை இழந்தனர். அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எச்.எம்.கே. மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி அசினை வற்புறுத்தியுள்ளார்.

அவர் சார்பில் வக்கீல் பாலமுருகன் கொச்சியில் உள்ள அசின் வீட்டு முகவரிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் தமிழர்களுக்காக கண் சிகிச்சை முகாம் நடத்தினீர்கள். தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், விளம்பரத்துக்காகவுமே இது செய்யப்பட்டது. அந்த முகாமில் கண் அறுவை செய்து கொண்ட 10 பேர் பார்வை இழந்தனர். மேலும் 12 பேருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கு அசினும் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவும் பொறுப்பு ஏற்கவேண்டும். தவறுக்காக அசின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்துக்குள் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களுடைய கவனக்குறைவாலும், பொறுப்பற்ற தலைமையாலுமே பார்வை இழப்பு சம்பவம் நடந்துள்ளது.

இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்
» மது அருந்தும் காட்சிக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு: நடிகை திரிஷா மீது பா.ம.க. வக்கீல் போலீசில் புகார்
» ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு
» கண் சிகிச்சையால் பார்வை இழப்பு: அசின் பதில் சொல்ல வேண்டும் – மே 17 இயக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum