ரமலத்தை திருமணம் செய்தது செல்லாது என மனு செய்கிறார் பிரபுதேவா!
Page 1 of 1

ரம்லத்துடன் தனக்கு நடந்த திருமணம் பதிவு செய்யாதது; எனவே அதை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்ய பிரபுதேவா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரம்லத்தை திருமணம் செய்து, அவர் மூலம் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொண்டவர் பிரபு தேவா. ஆனால் நயன்தாராவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, மனைவியை மறந்து, கள்ளக்காதலி பின்னால் சுற்றத் தொடங்கினார்.
மனைவி இருக்கும்போதே, நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.
இதனால் அதிர்ந்துபோன ரம்லத், நீதிமன்றத்தில் பிரபு தேவா, நயன்தாரா இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் பிரபுதேவா, நயன் தாராவை 23-ந்தேதி ஆஜராகும்படி குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் நடப்பது குற்றம் என்ற ரீதியில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ரம்லத்தும், பிரபுதேவாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது சட்டப்படி செல்லாது என்று பிரபு தேவா கருதுகிறார். எனவேதான் நயன்தாராவை திருமணம் செய்வேன் என துணிச்சலாக அவரை பேட்டி அளித்தாராம். ரம்லத்திடம் இருந்து இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு வராது என்றும் அவர் கருதியிருக்கிறார்.
ஆனால் ரம்லத் நீதிமன்றத்துக்குப் போனதால் இப்போது நயன்தாராவுடனான திருமணத்தை தள்ளி வைத்து விட்டார்.
ரம்லத் வழக்கை எவ்வாறு சந்திப்பது என்று வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார் பிரபுதேவா. முதல் சம்மனுக்கு பிரபுதேவாவும் நயன்தாராவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
2-வது சம்மன் தற்போது வந்துள்ளது. இந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகி ரம்லத் திருமணம் செல்லாது என நிரூபிக்க ஆதாரங்களை அவர் தேடுவதாக கூறப்படுகிறது. வக்கீல்களுடனும் இது சம்பந்தமாக விவாதித்து வருகிறார்.
இதை எதிர்ப்பார்த்தே, கணவன்- மனைவியாக சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ரம்லத் தரப்பு தயாராகி வருகிறது.
பிரபுதேவாவை மணந்ததும் ரம்லத் இந்து மதத்துக்கு மாறி பெயரை லதா என மாற்றிக் கொண்டார். அதற்கான அரசு கெஜட்டில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவற்றிலும் கணவர் பிரபுதேவா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பிறப்பு சான்றிதழிலும் இருவரும் தாய், தந்தை என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
எனவே நவம்பர் 23-ம் தேதி விசாரணையை இரு தரப்புமே பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: உயர் நீதிமன்றம்
» தொழிலதிபரை திருமணம் செய்கிறார் நடிகை தபு
» பிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்
» இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா
» சென்னையில் குடியேறியது நயன் – பிரபுதேவா ஜோடி : பிப்ரவரியில் திருமணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum